»   »  விஷாலை விரட்டுவேன்! - மார்தட்டும் ஜேகே ரித்தீஷ்

விஷாலை விரட்டுவேன்! - மார்தட்டும் ஜேகே ரித்தீஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஷாலை விரட்டுவேன்! - ஜேகே ரித்தீஷ்- வீடியோ

கடந்த முறை நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி அமோக வெற்றிப் பெற்றதற்கு ஜேகே ரித்தீஷ் முக்கிய காரணமாகத் திகழ்ந்தார். நாடக நடிகர்களின் வாக்குகள் பெருமளவு கிடைப்பதற்கு அவர் தீவிர வேலைப் பார்த்தார்.

ஆனால் விஷால் அணி ஜெயித்து வந்த பிறகு, ஜேகே ரித்தீஷுக்கும் விஷாலுக்கும் கருத்து வேறுபாடு எழுந்தது. இப்போது அது தீவிரமாகிவிட்டது. விஷாலை இப்போது கடுமையாக எதிர்க்கும் முதல் நபராகிவிட்டார் ஜேகே ரித்தீஷ்.

JK Ritheesh to contest against Vishal

இந்த ஆண்டு மே மாதத்தில் நடிகர் சங்கத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் விஷாலுக்கு எதிராக ஜேகே ரித்தீஷ் களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.

நேற்று நடந்த ஒரு சினிமா நிகழ்ச்சியில் ஜேகே ரித்தீஷ் பேசுகையில், நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், விஷாலை நடிகர் சங்கத்தை விட்டே விரட்டப் போவதாகவும் ஆவேசமாகப் பேசினார்.

விஷால் பக்கத்தில் இப்போதும் நம்பிக்கையான, மரியாதைக்குரிய நபர்கள் உள்ளனர். ஆனால் ஜேகே ரித்தீஷ் பக்கத்தில்? கிடைத்த கேப்பில் சுருட்டப் பார்க்கும் நபர்களை வைத்துக் கொண்டு எப்படி விஷாலை வீழ்த்தப் போகிறாரோ!

English summary
Former MP and actor JK Ritheesh has decided to contest against Vishal in Nadigar Sangam election.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil