»   »  தப்பாட்டக் கலைஞனுக்கும், ஒப்பாரி பெண்ணுக்கும் காதல்... ஜேகே ரித்தீஷ் தயாரிக்கும் படம்!

தப்பாட்டக் கலைஞனுக்கும், ஒப்பாரி பெண்ணுக்கும் காதல்... ஜேகே ரித்தீஷ் தயாரிக்கும் படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தப்பாட்டம் என்ற படத்தின் மூலம் மீண்டும் தயாரிப்பாளராகியுள்ளார் நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜேகே ரித்தீஷ்.

நடிகராகவும் அரசியல் பிரமுகராகவும் பலராலும் நன்கு அறியப்பட்டவரான ஜே.கே.ரிதீஷ், தனது தயாரிப்பு நிறுவனம் சாகியா செல்லுலாய்ட்ஸ் மூலம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

JK Ritheesh producing Thappattam

தப்படிக்கும் கலைஞனுக்கும், ஒப்பாரி வைக்கும் பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. இருவரும் ஊரே மெச்சும் சிறந்த தம்பதியாக வாழ்கின்றனர். இவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராவிதமாக ஒரு சம்பவம் நிகழ்ந்து இவர்களது உறவில் பிளவை ஏற்படுத்துகிறது. இருவராலும் பிரச்சனைகளை சமாளிக்க முடிந்ததா, மீண்டு வந்தார்களா என்பதை திரைக்கதையாக்கி இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் முஜிபூர்.

JK Ritheesh producing Thappattam

"மனித உறவுகளின் மகத்துவத்தையும், உண்மையும் இப்படம் ஆணித்தனமாக கூறும்படி இருக்கும். இக்கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து 1980 பிண்ணனிகளில் நடக்கும்படியாக கதை இடம்பெற்றுள்ளது.

JK Ritheesh producing Thappattam

இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி அனைவரின் மனதையும் உருக்கும்படியாக அமையும்," என்று கூறுகிறார் இயக்குநர் முஜிபூர். இவர் பிரபல இயக்குனர்கள் மகேந்திரன் மற்றும் பிரியதர்ஷன் ஆகியோரிடன் பணியாற்றியவர். இதற்கு முன் "இரு நதிகள்" எனும் படத்தை இயக்கியுள்ளார்.

கதாநாயகனாக புதுமுகம் துரை சுதாகர் நடிக்கின்றார். இவர் நிலா புரோமோட்டர் நிறுவனத்தின் தலைவர். தப்பாட்ட கலைஞரான இந்த கதாபாத்திரத்திற்காக 40 நாட்கள் சிறப்பு பயிற்சியை மேற்கொண்டு நடித்துள்ளார்.

JK Ritheesh producing Thappattam

கதாநாயகியாக டோனா ரோசாரியோ நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இப்படித்தின் இயக்குநர் முஜிபூர், துளசி ரூபி ஜெயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, சென்னை, திருவனந்தபுரம், நாகர்கோயில் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் வேளையில், படக்குழுவினர் இப்படத்தை தீபாவளி தினத்தன்று வெளியிட மும்முரமாக செயல்ப்பட்டு வருகின்றனர்.

English summary
Former MP JK Ritheesh is producing a new movie titled Thappattam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil