»   »  2 நாட்களில் ரூ. 60 கோடி: இது பயங்கர மெர்சலால்ல இருக்கு!

2 நாட்களில் ரூ. 60 கோடி: இது பயங்கர மெர்சலால்ல இருக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஜூனியர் என்.டி.ஆர். நடித்த ஜெய் லவ குசா படம் ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளது.

பாபி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். மூன்று வேடங்களில் நடித்த ஜெய் லவ குசா படம் வியாழக்கிழமை வெளியானது. அதில் ஒரு கதாபாத்திரம் நெகட்டிவானது.

நெகட்டிவ் கதாபாத்திரத்திற்கு சரளமாக பேசுவதில் பிரச்சனை உண்டு.

வசூல்

வசூல்

படம் வியாழக்கிழமை ரிலீஸானாலும் முதல் நாளே உலக அளவில் ரூ. 49 கோடி வசூல் செய்தது. படம் ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ. 60 கோடி வசூலித்துள்ளது. வார நாட்களிலேயே இப்படி என்றால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நிச்சயம் நல்ல வசூல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

நன்றி

நன்றி

ஜெய் லவ குசா படத்தை வெற்றி அடைய செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ஜூனியர் என்.டி.ஆர். ஒரு நடிகனாக இதை விட வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது என்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்.

நிவேதா தாமஸ்

நிவேதா தாமஸ்

ஜூனியர் என்.டி.ஆரின் சகோதரர் கல்யாண் ராம் தயாரித்த இந்த படத்தில் நிவேதா தாமஸ், ராசி கன்னா, ரோனித் உள்ளிட்டோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ்

பிக் பாஸ்

ஜூனியர் என்.டி.ஆர். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் வீட்டிற்கு சென்று ஜெய் லவ குசா படத்திற்கு விளம்பரம் தேடினார் நிவேதா தாமஸ்.

English summary
Junior NTR starrer Jai Lava Kusa has collected Rs. 60 crore worldwide within two days of its release.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil