»   »  'கும்கி' புகழ் ஜோ மல்லூரி சகோதரர் மரணம்...நேரில் சென்று ஆறுதல் கூறிய பாரதிராஜா!

'கும்கி' புகழ் ஜோ மல்லூரி சகோதரர் மரணம்...நேரில் சென்று ஆறுதல் கூறிய பாரதிராஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எழுத்தாளரும், நடிகருமான ஜோ மல்லூரியின் சகோதரர் இறப்புக்கு இயக்குநர் பாரதிராஜா நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார்.

பாரதிராஜாவின் உதவியாளர், எழுத்தாளர், பேச்சாளர் என்று பன்முகங்களுடன் வலம்வந்த ஜோ மல்லூரி பிரபு சாலமனின் 'கும்கி' மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

Joe Malloori Brother Died Heart Attack

சமீபத்தில் வெளிவந்த 'காக்கா முட்டை' படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இவர் நடிப்பில் அடுத்ததாக திருநாள் படம் வெளியாகவுள்ளது. இதில் நயன்தாராவின் அப்பாவாக நடித்திருக்கிறார்.

தனது நடிப்பிற்குக் கிடைத்த அங்கீகாரத்தால் சந்தோஷமாக வலம்வந்த ஜோ மல்லூரியின் வாழ்வில், தற்போது துயரமான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.

அவரின் சகோதரர் கஷ்மீர் ராஜா(ஹோமியோபதி மருத்துவர்) மாரடைப்பு காரணமாக இறந்து விட்டார்.இதனையறிந்த ஜோ மல்லூரி உடனடியாக சொந்த ஊரான ராயப்பட்டிக்கு(தேனி) விரைந்து சென்றார்.

திரையுலக நண்பர்கள் ஜோ மல்லூரியிடம் துக்கம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஜோ மல்லூரி குருவாக மதிக்கும் இயக்குநர் பாரதிராஜா அவரின் வீட்டிற்கு சென்று நேரில் ஆறுதல் கூறியிருக்கிறார்.

English summary
Actor Joe Malloori Brother Recently Died in Heart Attack.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil