ரூபாய் நோட்டுக்களை எரித்த பிக் பாஸ் தனலட்சுமிக்கு தண்டனை இல்லையா.. கொதித்தெழுந்த ஜோ மைக்கேல்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக வலம் வரும் தனலட்சுமி இந்திய ரூபாய் நோட்டுக்களை தீயிட்டு எரிப்பது போன்ற வீடியோவை ஷேர் செய்து இதற்கு தண்டனை இல்லையா என பிக் பாஸ் விமர்சகர் ஜோ மைக்கேல் கேள்வி எழுப்பி உள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து விமர்சித்து வருபவர் ஜோ மைக்கேல். பாலாஜி முருகதாஸுக்கும் இவருக்கும் இடையே கடும் சண்டையே நடந்தது.
இந்நிலையில், தனலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் வெளியிட்ட வீடியோ ஒன்றை ஷேர் செய்து கண்டனம் தெரிவித்துள்ளார் ஜோ மைக்கேல்.

விஜய் டிவி நபர்களுடன் நெருக்கம்
விஜய் டிவி நாஞ்சில் விஜயன் உடன் வத்திக்குச்சி எனும் ஷார்ட் பிலிம்களில் எல்லாம் நடித்து வந்தவர் தான் தனலட்சுமி. வெளியே தான் மக்களில் இருந்து ஒரு போட்டியாளர் என்றும் மக்கள் போட்டியாளர் என்றும் சொல்லப்படுகிறார் என்றும், ஆனால், விஜய் டிவி நபர்களுடன் இவருக்கு நெருங்கிய நட்பு வட்டாரம் இருந்த நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

கெட்ட வார்த்தையில் திட்டும் தனா
அசிங்கமாகவும் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியும் தனலட்சுமி ஒருவரை திட்டும் வீடியோவையும் சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்து பிக் பாஸ் தனலட்சுமியின் உண்மை நிலை இதுதான். அவர் ஒன்றும் அப்பாவியோ, சின்ன பொண்ணோ கிடையாது என அவரது முகத்திரையை கிழித்துத் தொங்க போட்டு வருகின்றனர்.

ரூபாய் நோட்டுக்களை எரித்து
இந்நிலையில், பிக் பாஸ் விமர்சகர் ஜோ மைக்கேல் தனது ட்விட்டர் பக்கத்தில் தனலட்சுமியின் ஒரு வீடியோவை ஷேர் செய்து பரபரப்பை கிளப்பி உள்ளார். அந்த வீடியோவில், தனலட்சுமி ரூபாய் நோட்டுக்களை லைட்டர் கொண்டு எரித்து சாம்பலாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தண்டனை இல்லையா
மேலும், அந்த வீடியோவை ஷேர் செய்து இது சட்டப்படி தப்பாச்சே, இதற்கு ஏதும் தண்டனை இல்லையா என முதலமைச்சர் ட்விட்டர் ஐடி வரை டேக் செய்து இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் ஜோ மைக்கேல். தனலட்சுமியின் வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் அவரை கண்டித்து வருகின்றனர்.

ஃபேக் கரன்ஸியா
தனலட்சுமி வியூஸுக்காக நிஜ ரூபாய் நோட்டுக்களைத் தான் எரித்தார் என ஜோ மைக்கேல் குற்றம்சாட்டி உள்ளார். ஆனால், அது நிஜ கரன்ஸியா? அல்லது ஃபேக் கரன்ஸியா என தெரியவில்லையே என சில பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். மேலும், ஜோ மைக்கேல் அவருக்கு பிடித்த போட்டியாளருக்காக தனாவை இப்படி டார்கெட் செய்து தவறு என்றும், உள்ளே சென்றுள்ள அத்தனை போட்டியாளர்களுக்கும் ஏகப்பட்ட மோசமான பின்னணி இருக்கு என விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











