twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மகேந்திரனின் மகன் போட்ட அந்த ட்வீட்: பதறி தூக்கம் தொலைத்த ரசிகர்கள்

    By Siva
    |

    Recommended Video

    Director Mahendran:பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார்

    சென்னை: இயக்குநர் மகேந்திரனின் மகன் போட்ட அந்த ட்வீட்டை பார்த்ததுமே ரசிகர்கள் பதறிவிட்டனர்.

    இயக்குநர் மகேந்திரன் உடல் நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இன்று காலமானார்.

    அவரின் மறைவு செய்தி அறிந்து திரையுலகினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    மகேந்திரன் பேசியது குறைவு, படங்கள் பேசியது அதிகம்: பிரபலங்கள் அஞ்சலி மகேந்திரன் பேசியது குறைவு, படங்கள் பேசியது அதிகம்: பிரபலங்கள் அஞ்சலி

    ட்வீட்

    முன்னதாக அவரின் மகன் இயக்குநர் ஜான் அப்பா என்று மட்டும் எழுதி மகேந்திரனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். அதை பார்த்த ரசிகர்கள் பதறிப் போய் சாருக்கு என்னாச்சு, நன்றாக இருக்கிறார் அல்லவா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டனர்.

    மரணம்

    நீங்கள் கவலைப்படாதீர்கள், அப்பா குணமடைவார் என்று ரசிகர்கள் ஜானுக்கு ஆறுதல் தெரிவித்தனர். முதல் ட்வீட் போட்ட சில மணிநேரங்களில் அப்பா இறந்துவிட்டார் என்று ட்விட்டரில் தெரிவித்தார் ஜான்.

    வருத்தம்

    ஜானின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் மகேந்திரனின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். மேலும் மகேந்திரனின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்கிறார்கள்.

    சேரன்

    முள்ளும் மலரும் என்று சொன்ன நீங்கள் மீண்டும் மலரவேண்டும். உதிரிப்பூக்கள் எடுத்த நீங்கள் எங்கள் இதயத்தில் என்றும் உதிராப்பூக்கள்....
    உங்கள் படைப்புகளோடு என்றும் எங்களோடு வாழ்வீர்கள்... நீங்கள் இல்லையென்ற செய்தி வந்தபோது உங்கள் படைப்புகளின் ஆயிரம் காட்சிகள் கோர்வையாக வந்துபோகிறது என்று இயக்குநர் சேரன் ட்வீட் செய்துள்ளார்.

    English summary
    Director John's tweet has kindled the suspicion that director Mahendran was in a bad condition. Later John himself announced that his legendary dad is no more.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X