Don't Miss!
- Sports
இந்தியாவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த பாக். முடிவே எடுக்காமல் திரும்பி வந்த ஜெய்ஷா.. என்ன நடந்தது
- News
பிராமணர் என்பதற்காகவே வெறுப்பதா? இதுவும் தீண்டாமைதான் - இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆதங்கம்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
2,300 கோடி கொடுத்தாலும் உங்க சகவாசமே வேண்டாம்.. டிஸ்னிக்கு நோ சொன்ன ‘மானஸ்தன்’ ஜானி டெப்!
சென்னை: இரண்டாவது மனைவி ஆம்பர் ஹெர்ட் உடனான சட்டப் போராட்டத்தில் வென்று தான் ஒரு காமக் கொடூரன் இல்லை என்பதை நிரூபித்த நிலையில், நடிகர் ஜானி டெப்புக்கு மீண்டும் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் ஜேக் ஸ்பேரோவாக நடிக்க 2,370 கோடி ரூபாய் (300 மில்லியன் டாலர்கள்) உடன் மன்னிப்பு கடிதமும் தரப்பட்டதாக தகவல்கள் பரவின.
மேலும், அதனை ஏற்றுக் கொண்டு ஜானி டெப் மீண்டும் ஜேக் ஸ்பேரோவாக ரசிகர்களை திருப்திப்படுத்த போகிறார் என வதந்திகளும் வெளியாகின.
இந்நிலையில், ஜானி டெப்பின் செய்தி தொடர்பாளர், ஜானி டெப் டிஸ்னி அப்படியொரு ஆஃபர் அளித்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார் என அதிரடியாக கூறியுள்ளது உலக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
என்னது!
ரகுமானுக்கு
காதல்
கடிதங்கள்
வந்துச்சா...
அத
யார்
கிழிச்சு
போட்டா
தெரியுமா?

கேப்டன் ஜேக் ஸ்பேரோ
கிரை பேபி, ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட் உள்ளிட்ட ஏகப்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்தாலும், ஜானி டெப் என்றதுமே ரசிகர்களுக்கு கேப்டன் ஜேக் ஸ்பேரோவாகத்தான் அவரை தெரியும். கிட்டத்தட்ட பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் 5 பாகங்களில் அதே கதாபாத்திரத்தில் நடித்து உலகப் புகழ் பெற்றவர் ஜானி டெப்.

தூக்கி அடிக்கப்பட்ட ஜானி டெப்
மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருந்த சமயத்தில் நடிகர் ஜானி டெப்புக்கும் அவரது இரண்டாவது மனைவியும் நடிகையுமான ஆம்பர் ஹெர்ட்டுக்கும் இடையே நடந்த சட்டப் போராட்டத்தால், ஜானி டெப் தான் குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு வழங்கும் முன்னரே முடிவு கட்டிய டிஸ்னி பைரேட்ஸ் ஆஃபி தி கரீபியன் 6வது பாகத்தில் நடிக்க வேண்டாம் என ஜானி டெப்பை தூக்கி அடித்தது.

சாதகமான தீர்ப்பு
சமீபத்தில் ஆம்பர் ஹெர்டுக்கு எதிராகவும் ஜானி டெப்புக்கு சாதகமாகவும் வெளியான வரலாற்று தீர்ப்பு ஹாலிவுட் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. மீண்டும் ஜேக் ஸ்பேரோவாக ஜானி டெப் நடிக்க வேண்டும் என கிட்டத்தட்ட 8 லட்சம் ரசிகர்கள் கையெழுத்துப் போட்டுள்ளனர். தீர்ப்புக்கு பிறகு ஜானி டெப் நடிக்கப் போகும் படம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்பதால் அவருக்கு பெரிய தொகையை கொடுத்து டிஸ்னி நிறுவனம் மடக்கப் பார்த்ததாக தகவல்கள் வெளியாகின.

2370 கோடி சம்பளம்
மன்னிப்பு கடிதத்துடன் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் 6 மற்றும் 7ம் பாகத்தில் மீண்டும் ஜேக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஜானி டெப்புக்கு 300 மில்லியன் டாலர் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக ஹாலிவுட் மீடியாக்கள் தகவல் தெரிவித்தன. இந்திய மதிப்பில் சுமார் 2,370 கோடி ரூபாய் ஆகும். ஹாலிவுட்டில் அதிக பட்ச சம்பளத்தை வாங்கும் கிறிஸ் எவான்ஸ் ஒரு படத்துக்கு 70 மில்லியன் டாலர் தான் சம்பளம் வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

மானஸ்தன் ஜானி டெப்
நடிகர் ஜானி டெப் அந்த சம்பளத்துக்கு ஒத்துக் கொண்டு நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டார் என வதந்திகள் வெளியான நிலையில், இது முற்றிலும் வதந்தி நடிகர் ஜானி டெப் மீண்டும் டிஸ்னி தயாரிக்கும் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் நடிக்க மாட்டார். வேறு ஏதாவது பெரிய கம்பெனி படத்தில் தான் நடிக்கப் போகிறார் எனக் கூறியது ரசிகர்களை சற்றே ஏமாற்றமடைய செய்தாலும், 'மானஸ்தன்' ஜானி டெப் என அவரை கொண்டாடி வருகின்றனர்.