»   »  'ஜோக்கர்' நடிகைக்கு ஒளிப்பதிவாளருடன் நிச்சயதார்த்தம்.. விரைவில் டும் டும் டும்!

'ஜோக்கர்' நடிகைக்கு ஒளிப்பதிவாளருடன் நிச்சயதார்த்தம்.. விரைவில் டும் டும் டும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜுமுருகன் இயக்கி தேசிய விருது பெற்ற 'ஜோக்கர்' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை காயத்ரி கிருஷ்ணா. அந்தப் படத்தில் அரசுக்கு எதிராக போராடும் போராளிப் பெண்ணாக 'இசை' எனும் கேரக்டரில் நடித்திருந்தார்.

'ஜோக்கர்' தவிர சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார் காயத்ரி கிருஷ்ணா. விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகும் 'மேற்கு தொடர்ச்சி மலை' படத்தில் காயத்ரி கிருஷ்ணா தான் ஹீரோயின். இந்தப் படம் விரைவில் வெளிவர இருக்கிறது.

Joker actress to marry a cinematographer

காயத்ரி கிருஷ்ணாவுக்கும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சினிமா ஒளிப்பதிவாளர் ஜீவன்ராஜுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. கடந்த ஏப்ரல் 2-ம் தேதி இருவருக்கும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்த ஆண்டு திருமணம் நடக்க இருக்கிறது.

Joker actress to marry a cinematographer

"இது காதல் திருமணம் தான். ஆனால் பெற்றோர் சம்மத்துடன் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன். அவர் ஒளிப்பதிவுப் பணியை தொடர்வார். எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது" எனக் கூறியிருக்கிறார் காயத்ரி கிருஷ்ணா.

English summary
Actress Gayathri Krishna has made her debut with 'Joker' movie. In the film, she played the role Isai. She is the heroine in the film 'Merku thodarchi malai' produced by Vijay Sethupathi. Gayathri to marry Cinematographer Jeevanraj soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X