Don't Miss!
- Sports
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்.. ரசிகர்களுக்கு பிசிசிஐ தந்த மெகா சர்ஃப்ரைஸ்.. வரலாற்று தொடராக மாறுகிறது
- News
ரயிலில் பயணித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய பெண்.. காரணம் என்ன?
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சினிமா மற்றும் விளம்பர படங்களில் புதிய அதிர்வலைகளை உருவாக்கும் Josh App ஸ்டார் மேகன்!
சென்னை: "இந்தியாவின் மிகப்பெரிய ஷார்ட் வீடியோ செயலியான ஜோஷ் (Josh) ஆப், தனது வித்தியாசமான கன்டென்ட்கள் மூலம் வீடியோ உலகில் புதிய உயரம் தொட்டு இருக்கிறது. கடந்த 2020ம் வருடம்தான் இந்த செயலி தொடங்கப்பட்டு இருந்தாலும் ஏற்கனவே இது டாப் ஷார்ட் வீடியோ செயலியாக உருவெடுத்துவிட்டது. அதேபோல் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த மேடை அமைத்து கொடுப்பதிலும் ஜோஷ் (Josh) செயலிதான் நம்பர் ஒன்.

ஜோஷ் தமிழ் கம்யூனிட்டி மூலம் பலதரப்பட்ட கலைஞர்கள், திறமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான மேடை அமைத்து கொடுத்து பிரபலப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த ஜோஷ் கம்யூனிட்டி பிரபலம் மேகன் திரைப்படங்கள் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்து புதிய அதிர்வலைகளை உருவாக்கி வருகிறார்.
வங்கியில் வேலை பார்த்துக் கொண்டே ஃபேஷன் மற்றும் சினிமாவில் தனது முத்திரையை பதித்து வருகிறார் மேகன். ஃபேஸ் ஆஃப் சென்னை 2018 ஃபேஷன் விழாவில் கலந்து கொண்ட இந்த ஆணழகன் ரன்னர் அப் ஆனார்.


ஜோஷ் செயலி சார்பாக நடத்தப்பட்ட விழாவில் நம்பர் ஒன் ஸ்டைல் ஐகான் விருதையும் மாடல் மேகன் தட்டிச் சென்றார்.
கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான கமலி ஃப்ரம் நடுக்காவேரி படத்தில் நடித்துள்ள இவர் ஜெயசந்திரன், சத்யா, ரெமோ இன்டர்நேஷனல் காலேஜ், ரெயின்போ ஷர்ட்ஸ், போத்தீஸ், மில்கி மிஸ்ட் பனீர், வசுத் சில்க் வேட்டிகள், ரிரோ வேட்டிகள் மற்றும் சட்டைகள், ப்ரீமியர் ஃபிளாஸ்க் மற்றும் சேலத்தில் உள்ள சரவணா மருத்துவமனை உள்ளிட்ட ஏகப்பட்ட விளம்பரப் படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இதுமட்டுமின்றி இந்த வளரும் கலைஞர் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடர்பான விளம்பரத்திலும் நடித்துள்ளார்.

அடுத்ததாக ஒரிசா மேட்ரிமோனி விளம்பரத்தில் முகம் காட்டவுள்ள மேகன், நடிகைகள் நதியா மற்றும் அஞ்சலி உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.
ஜோஷ் செயலியை தனது பொழுதுபோக்கு அம்சம் சார்ந்த வீடியோக்களால் வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளார் மேகன். 744.7 ஆயிரம் ரசிகர்களையும், 6.4 மில்லியன் இதயங்களையும் வென்றுள்ளார் மேகன். இப்படி தனது கன்னி முயற்சியால் பெரும் இலக்கை நோக்கி நகரும் மேகனுக்கு அவர் பறக்க தேவையான சிறகுகளை அளித்து அவரை மேலும், உயர்த்த தேவையான முயற்சிகளை ஜோஷ் செயலி செய்து வருகிறது. மேகனை போல மேலும், பல திறமையானவர்களை அடையாளம் கண்டு உயர்த்தவும் ஜோஷ் செயலி திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
