»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதருக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர்நடராஜ் உத்தரவிட்டுள்ளார்.

காதல் பட இசையமைப்பாளரான ஜோஷ்வா ஸ்ரீதர், பெங்களூரைச் சேர்ந்த கீ போர்டு கலைஞரான நடாஷாவுடன் தலைமறைவாகிவிட்டார். தனது மகளை ஜோஷ்வா கடத்திச் சென்று விட்டதாக நடாஷாவின் தாயார் பெங்களூர் போலீஸில் புகார் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து சென்னை போலீஸாரும் விசாரணையைத் தொடங்கினர். இந் நிலையில் திடீரென செய்தியாளர்களை நடாஷாவுடன்சேர்ந்து சந்தித்த ஜோஷ்வா, தானும் நடாஷாவும் நண்பர்களே, காதலர்கள் அல்ல என்று விளக்கம் தந்தார்.

இதைத் தொடர்ந்து மீண்டும் அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

இந் நிலையில் ஜோஷ்வாவுக்கு எதிராக சிலர் சதி செய்வதாகவும், சென்னை போலீஸார் ஜோஷ்வாவை கைது செய்ய முயற்சிப்பதாகவும்ஜோஷ்வாவின் தாயார் ராஜலட்சுமி குற்றம் சாட்டியிருந்தார்.

இந் நிலையில் ஜோஷ்வா ஸ்ரீதரின் நடவடிக்கைகள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாகவும், அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகிவிளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை கமிஷனர் நடராஜ் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பெங்களூர் போலீஸில் இவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே சென்னைபோலீஸாரின் உதவியை பெங்களூர் போலீஸார் நாடினர். இதில் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ அதைத்தான் நாங்கள்செய்கிறோம்.

ஜோஷ்வா ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். இந் நிலையில் இன்னொரு பெண்ணுடன் அவர் தலைமறைவாக இருக்கவேண்டியதன் அவசியம் எங்களுக்குப் புரியவில்லை.

அவர் மீதான புகாரில் உண்மை இல்லை என்றால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கலாமே? அவர்களாகவே (ஜோஷ்வா, நடாஷா)கமிஷனர் அலுவலகத்திற்கு வருகிறோம் என்றார்கள். ஆனால் வரவில்லை. முன்ஜாமீன் இருக்கிறது, கைது செய்ய முடியாது என்கிறார்கள்.அப்படியென்றால் எந்த வழக்கில் முன் ஜாமீன் இருக்கிறது என்பதை அவர்கள் தெளிவாக்க வேண்டும்.

நடாஷாவின் தாயார் புகார் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கேட்கும் கேள்விகளுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியுள்ளது.இதனால்தான் ஜோஷ்வாவை போலீஸார் விசாரிக்கச் சென்றனர். ஆனால் அவர் பத்திரிக்கையாளர்களை மட்டும் சந்தித்து விட்டுதலைமறைவாவது என்ன நியாயம்?

எங்களிடம்தான் விசாரணைக்கு வர வேண்டும் என நாங்கள் கூறவில்லை. பெங்களூர் போலீஸில் கூட ஆஜராகி விளக்கம் அளிக்கலாம்.ஆனால் ஓடி ஒளிவதில் அர்த்தமில்லை. விசாரணைக்கு அவர்கள் உட்பட்டுத்தான் ஆக வேண்டும் என்றார் நடராஜ்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil