»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடிகை ஜோதிகா, நடிகர் வடிவேலு ஆகியோர் மீதுபோடப்பட்டிருந்த ரெட் கார்ட் தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

ஜி.வி. பிலிம்ஸ் மற்றும் மதனகோபால் நாயுடு என்ற தயாரிப்பாளர் ஆகியோரிடமிருந்து வாங்கிய பணத்தைத்திருப்பிக் கொடுக்காததால், நடிகர் வடிவேலு புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.

இதேபோல, அர்ஜூன் நடிக்கும் மணிகண்டா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டு கால்ஷீட் கொடுக்காமல்டபாய்த்ததால், ஜோதிகாவுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந் நிலையில் இவர்களது பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் நடிகர் சங்கத் துணைத் தலைவர் சரத்குமார்முயற்சி மேற்கொண்டார். தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளிதரன், துணைத் தலைவர் கே.ராஜன், நிர்வாகிகள்சித்ரா லட்சுமணன், இப்ராகிம் ராவுத்தர் உள்ளிட்டோருடன் சரத்குமார் பேச்சு நடத்தினார்.

பேச்சுவார்த்தையின் இறுதியில், வடிவேலு தான் கொடுக்க வேண்டிய ரூ. 3 லட்சம் பணத்தை திருப்பிக் கொடுத்தார்.அதேபோல, ஜோதிகா மணிகண்டாவுக்கு தேதிகள் ஒதுக்க ஒத்துக் கொண்டார்.

இதையடுத்து இருவர் மீதான தடையையும் தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளதாக சங்கத் துணைத் தலைவர்கே.ராஜன் கூறியுள்ளார்.

வழக்கமாக இதுபோன்ற பஞ்சாயத்துக்குத் தலைமை தாங்கும் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் இந்தப்பிரச்சினையில் தலையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், விஜயகாந்துடன் சமீப காலமாக பணிப்போர்நடத்தி வரும் சரத்குமார், தனியாக பஞ்சாயத்து நடத்தி பிரச்சினையை தீர்த்து வைத்திருப்பது பல கேள்விகளைஎழுப்பியுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil