KPY பாலா ஒரு புள்ளை பூச்சி.. அவர் குடும்பம் அப்படியேதான் இருக்கு.. பரிதாபம்.. மனம் திறந்த பிரபலம்
சென்னை: கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா ரசிகர்களால் KPY பாலா என்று அழைக்கப்படுகிறார். அவர் சமீபத்தில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகிருக்கிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ஏழைகளுக்கு தன்னால் முடிந்த உதவியை அவர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் பற்றி எழுந்த விமர்சனங்களுக்கு பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பதிலடி கொடுத்திருக்கிறார்.
KPY பாலா சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு ஜுங்கா படத்தின் மூலம் திரைத்துறையிலும் அறிமுகமானார். சின்னத்திரையில் போட்டியாளராக கலந்துகொண்டு பிறகு அதே சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் நிலைக்கு உயர்ந்தார். அவரது டைமிங் காமெடிகளும் அனைவரையும் ரசிக்கவே வைத்தன. இதனால் அவருக்கென்று மக்களிடையே தனி ஒரு கவனமும் விழ ஆரம்பித்தது.
உதவும் பாலா: சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தான் சம்பாதித்த பணத்தை கொண்டு ஏழைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் அவர். ஆம்புலன்ஸ், இரு சக்கர வாகனம், பண உதவி என ஏகப்பட்ட வழிகளில் உதவிகளை வாரி வழங்கிவருகிறார். இதனால் அவருக்கு மக்களிடையே நல்ல மதிப்பும் எழுந்திருந்தது. மேலும் தான் சம்பாதிக்கும் பணத்தை தொடர்ந்து உதவி செய்வதற்கு செலவழிப்பேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஹீரோவாக அறிமுகம்: சூழல் இப்படி இருக்க காந்தி கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார் பாலா. பாலாவுடன் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். மதராஸி திரைப்படத்திற்கு போட்டியாக கடந்த ஐந்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. பாலா முதன்முறையாக ஹீரோவாக நடித்திருக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது.
எப்படி இருந்தது படம்: எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி படம் இல்லை என்றாலும் படம் ஒன்றும் சூர மொக்கை இல்லை என்ற நிலையே பலரிடமும் இருந்தது. மேலும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட படம் வசூல் ரீதியாகவும் ஓரளவுக்கு நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது. சூழ்நிலை இப்படி இருக்க பாலா உதவி செய்கிறேன் என்கிற பெயரில் மோசடி செய்கிறார், அவர் செய்யும் உதவிகள் அனைத்தும் போலியானவை என ஒரு கருத்து கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் எழுந்தது.
பாலாவின் பதிலடி: இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டிருந்த பாலா, 'என்னை சர்வதேச கைக்கூலி என்கிறார்கள் நான் ஒரு தினக்கூலி' என்றும்; தான் செய்யும் உதவிகளில் எந்த போலித்தன்மையும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பாலா குறித்து பிரபல பத்திரிகையாளரான அந்தணன் தனியார் youtube சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.
அந்தணன் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "கலக்கப்போவது யாரு பாலாவை கடந்த சில நாட்களாகவே ரொம்பவே அடித்துவருகிறார்கள். இது தேவையில்லாத ஒன்று. அவர் ஒரு புள்ளை பூச்சி. அவர் இன்னொருவரிடம் வாங்கி உதவி செய்வதாகவே இருக்கட்டுமே. அதனால் மற்றவர்கள் பலன் அடைகிறார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும். இன்னொருவரிடம் வாங்கும் பணத்தில் 50 ரூபாயை உதவி செய்துவிட்டு; இன்னொரு 50 ரூபாயை வீட்டுக்கு கொண்டு செல்கிறாரா. அவரது குடும்பம் இன்னமும் அப்படியேத்தான் இருக்கிறது. அவர் ஒரு படம் ஹீரோவாக நடித்திருக்கிறார். விஞ்சிப்போனால் இன்னொரு படத்தில் நடிப்பார். அவர் என்ன இன்னொரு விஜய், அஜித், சிவகார்த்திகேயனாகவா மாறிவிடப்போகிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











