ஏன் பணம் கொடுக்குறீங்க?.. கேள்வி கேட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?.. அடக்கிய தனுஷ்?.. பிரச்னைக்கு காரணம் அவரா?
சென்னை: தனுஷும், ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டு தற்போது விவாகரத்து பெற்றுவிட்டார்கள். இரண்டு பேரின் பிரிவுக்கு ஏகப்பட்ட காரணங்கள் யூகங்களாக சொல்லப்படுகின்றன. ஆனால் அதுகுறித்து உண்மையான தகவல்கள் எதுவும் இல்லை. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி இருவர் பற்றி பேசியிருக்கும் விஷயம் ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.
ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதல் கொண்டேன் திரைப்பட சமயத்தில் காதலிக்க ஆரம்பித்தார். அவர்களது காதலுக்கு வீட்டு சம்மதம் கிடைத்தைத் தொடந்து கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்களையும் அந்தத் தம்பதி பெற்றது. கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடிகளில் ஒன்றாகவும் அவர்கள் வலம் வந்துகொண்டிருந்தார்கள்.
பலமான சப்போர்ட்: திருமணத்துக்கு பிறகு ஒருவருக்கொருவர் ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவந்தார்கள். தனுஷின் நடை, உடை என அத்தனையும் மாறியதற்கு ஐஸ்வர்யாதான் காரணம். அதேபோல் தனக்குள் இருக்கும் இயக்குநராகும் ஆசையை ஐஸ்வர்யா வெளிப்படுத்த உடனடியாக அந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்தார் தனுஷ். இப்படி சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது உறவில் திடீரென விரிசல் ஏற்பட்டது.

சட்டப்பூர்வமாக விவாகரத்து: அந்த விரிசல் நாளடைவில் சரியாகிவிடும் என்றுதான் குடும்பத்தினரும், ரசிகர்களும் நினைத்தார்கள். ஆனால் அது குறையாமல் விரிவடைந்துகொண்டே சென்றது. ஒருகட்டத்தில் இனியும் சேர்ந்து வாழ்ந்தால் நிம்மதி இருக்காது என்று நினைத்த அவர்கள்; சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டார்கள். இரண்டு மகன்களையும் அவர்கள் கோ பேரண்ட்டிங் முறையில் வளர்க்க முடிவெடுத்து அதன்படி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
பிஸ்மி பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "வெற்றிமாறன் - சிம்புவும் இணைந்திருக்கும் அரசன் படத்துக்கு தனுஷின் மொத்த சப்போர்ட்டும் இருக்கிறது. வாடிவாசல் படம் ட்ராப்பானதால் சீக்கிரமே ஒரு படம் செய்ய வேண்டும்; புதிதாக கதை செய்ய நேரமில்லை. எனவே வடசென்னை சம்பந்தமாக ஏற்கனவே இருக்கும் கதையை எடுக்கிறேன் என தனுஷிடம் வெற்றி கேட்டார்.
தனுஷ் செய்த உதவி: தனுஷுடம் உடனே அதற்கு சம்மதம் தெரிவித்து; தனது மேனேஜரை அழைத்து வடசென்னை கதை தொடர்பாக வெற்றிமாறன் என்ன கேட்டாலும் அதை செய்துகொடுக்கும்படி சொல்லிவிட்டார். அப்படித்தான் இந்தப் படம் ஆரம்பித்தது. வெற்றி மீது தனுஷுக்கு எப்போதுமே தனிப்பட்ட மரியாதை உண்டு. தனுஷும் ஐஸ்வர்யாவும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தபோது ஏகப்பட்ட முறை வெற்றிக்கு தனுஷ் பணம் கொடுத்திருக்கிறார்.
இதில் தலையிடாத: அப்போது ஒருமுறை எதற்காக நீங்கள் வெற்றிமாறனுக்கு பணம் கொடுக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு தனுஷோ, இதில் நீ தலையிடாத. இது எனக்கும் வெற்றிமாறனுக்கும் உள்ளது என்று கூறிவிட்டார். அந்த அளவுக்கு தனுஷ் - வெற்றிமாறன் நட்பு இருக்கிறது. அரசன் படத்தின் ப்ரோமோவை பொறுத்தவரை சிம்பு சென்னை பாஷை பேசுவது சுத்தமாக ஒட்டவே இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











