ரஜினிக்கு மனநிலை சரியில்லாமல் கமலை குத்த போனாரா?.. அந்த பஞ்சாயத்தை பற்ற வைத்த பிரபலம்

சென்னை: ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் அடையாளங்களாக திகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேரும் பல வருடங்கள் கழித்து சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள். அப்பட்த்தை யார் இயக்கப்போகிறார் என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி பேசியிருக்கும் விஷயம் ஷாக்கை கொடுத்திருக்கிறது.

இந்திய சினிமாவில் பலருக்கும் ரோல் மாடலாக திகழும் ரஜினியும், கமலும் கே.பாலசந்தரின் அறிமுகங்கள். ரஜினி வருவதற்கு முன்னதாகவே கமல் ஸ்டார் அந்தஸ்தில் இருந்தார். இரண்டு பேரும் சேர்ந்து பல படங்களில் நடித்தார்கள். ஆனால் ஒருகட்டத்தில் இரண்டு பேரும் பிரிந்து நடிக்க முடிவு செய்தார்கள். கமல்ஹாசனோ கொஞ்சம் கமர்ஷியல் படங்களிலும் நிறைய ஆர்ட் சினிமாக்களிலும் நடித்தார். ரஜினியோ முழுக்க முழுக்க கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்தார்.

இரண்டு பேருமே வளர்ச்சி: இரண்டு பேரும் வெவ்வேறு பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்டாலும் அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்தே வளர்ந்தார்கள். அவர்களுக்கு தொழில் போட்டி இருந்தது உண்மைதான். அதேசமயம் பொறாமை என்பது சற்றும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஒருவரையொருவர் புகழ்ந்துதான் பேசியிருக்கிறார்கள். இதனால் அவர்களுக்குள் இருக்கும் நட்பையும் திரைத்துறையில் பலரும் மதிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கமலேகூட தங்களது நட்பை பற்றி பெருமையாக பேசியிருக்கிறார்.

Journalist Bismi Shares Shocking incident about Rajinikanth And Kamal Haasan
Photo Credit:

இந்த வயதிலும் பிஸி: இரண்டு பேருக்கும் 70 வயதுக்கு மேல் ஆகிறது. இந்த வயதிலும் அவர்கள் இரண்டு பேரும் படு பிஸியாக நடித்துவருகிறார்கள். இருப்பினும் பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் திணறிவருகிறார்கள். கூலி, இந்தியன் 2, தக் லைஃப் என அவர்களது படங்கள் தோல்வியைத்தான் சந்தித்திருக்கின்றன. அடுத்ததாக கமல் அன்பறிவ் இயக்கத்திலும், ரஜினி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்கள்.

சேரும் ஸ்டார்கள்: இதற்கிடையே அவர்களை சேர்த்து வைத்து ஒரு படத்தை உருவாக்கும் முயற்சிகளும் ஒருபக்கம் நடந்தன. அது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கமலும், ரஜினியும் அதனை பூடகமாக உறுதிப்படுத்தியும் விட்டார்கள். பல வருடங்களுக்கு பிறகு அவர் இணையும் படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனமும், ராஜ்கமல் நிறுவனமும் தயாரிக்கின்றன. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி வெளியிட்டிருக்கும் வீடியோ ஷாக்கை கொடுத்திருக்கிறது.

என்ன வீடியோ?: அவர் அந்த வீடியோவில், "தனித்தனியாக சேர்ந்து நடித்தால்தான் இரண்டு பேருமே வளர முடியும் என்று முடிவெடுத்துதான் பிரிந்தோம் என்று கமல் என்னிடம் நேரடியாகவே கூறியிருக்கிறார். அதேபோல் பிரபலமான இயக்குநர் ஒருவர் என்னிடம், 'அலாவுதீனும் அற்புத விளக்கும் படம்தான் அவர்கள் சேர்ந்து நடித்த கடைசி படம். அந்தக் காலகட்டத்தில் ரஜினி கொஞ்சம் மனநிலை சரியில்லாமல் இருந்தார். அதற்கான சிகிச்சையை அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் ஏற்பாடும் செய்தார். அந்த படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் இடையே வாள் சண்டை காட்சி ஒன்று எடுக்கப்பட்டது. மனநிலை சரியில்லாமல் இருந்த அவர் அந்த ஷாட்டின்போது உண்மையிலேயே கமலை வாளால் குத்த போய்விட்டார். அதற்கு பிறகு சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று கமல் முடிவு செய்தா" என கூறியதாக தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X