மும்தாஜுக்கும் அந்த நிலைமை.. வடிவேலு என்ன பாடு படுத்தினார் தெரியுமா?.. விளாசிய பிரபலம்
சென்னை: வடிவேலு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை சினிமாவில் தொடங்கியிருக்கிறார். அப்படி அவர் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2, மாமன்னன், கேங்கர்ஸ், மாரீசன் ஆகிய படங்களில் மாமன்னனும், மாரீசனும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. வடிவேலுவும் அந்த படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் அவர் குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்.
வைகை புயல் வடிவேலு 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக அரசியல் மேடை ஏறினார். அந்த மேடைகளில் விஜயகாந்தை சரமாரியாக தாக்கி பேசினார் அவர். இதற்கு காரணம் அதற்கு முன்னதாகவே அவர்கள் இருவருக்கும் மோதல் போக்கு நிலவியதுதான். அந்த மோதலுக்கு வடிவேலுதான் முதல் விதை போட்டது என்ற பேச்சும் இன்றுவரை திரைத்துறையிலும் அரசியல் களத்திலும் இருப்பதுண்டு. அந்த விவகாரத்தால் வடிவேலு சில காலம் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கும் சூழல் உருவானது.
மீண்டும் வந்த வடிவேலு: அவருக்கு சினிமா வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் காமெடி சேனல்களில் எப்போதும் அவரது நகைச்சுவைகள் ஓடிக்கொண்டிருந்தன. இதனால் வைகை புயலுக்கு எப்போதுமே அழிவில்லை என்று அவரது ரசிகர்கள் கூற ஆரம்பித்தார்கள். முக்கியமாக மீம்ஸ்களிலும் அவர்தான் ட்ரெண்டிங்கில் இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் அவரைச் சுற்றி இருந்த பஞ்சாயத்துக்கள் அனைத்தும் ஒரு வழியாக முடித்து வைக்கப்பட்டு மீண்டும் சினிமா கதவுகள் திறக்கப்பட்டன.

மாமன்னன் வடிவேலு: அந்த வகையில் முதலில் அவர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். அப்படம் படுதோல்வியை சந்தித்தது. மேலும் வடிவேலுவுக்கு காமெடி வரவே இல்லை என பலரும் சொன்னார்கள். அந்த படத்துக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் இதுவரை பார்க்காத வடிவேலுவை ரசிகர்கள் பார்த்தார்கள். படம் மெகா பிளாக்பஸ்டர் ஆனது. வடிவேலு நடிப்புக்கு தியேட்டர்களில் அப்ளாஸ் அதிக அளவு எழுந்தன.
பிஸியான வடிவேலு: மாமன்னன் படத்துக்கு பிறகு அவர் நடித்த கேங்கர்ஸ், மாரீசன் ஆகிய இரண்டு படங்களிலும் வெவ்வேறு விதமாக தோன்றியிருந்தார். கேங்கர்ஸ் நகைச்சுவை ஓரளவு ரசிகர்களிடையே ஒர்க் அவுட் ஆகி இருந்தது. அதேபோல் மாரீசன் திரைப்படத்திலும் அவரது நடிப்பு அட்டகாசமாக இருந்தது. மேலும் சில படங்களில் அவர் இப்போது கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.
வடிவேலு பேச்சு: இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கூட்டம் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது அதில் பேசிய வடிவேலு, "விமர்சனம் என்கிற பெயரில் பத்து யூட்யூபர்கள் சேர்ந்து சினிமாவை அழித்துவருகிறார்கள். அவர்களை போர்க்கால அடிப்படையில் உண்டு இல்லை என்று செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் சினிமாவை அழித்துவிடுவார்கள்" என பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு பலரிடமும் கவனத்தை ஈர்த்த சூழலில் இது குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது youtube சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
செய்யாறு பாலு பேச்சு: அவர் அந்த வீடியோவில், "நடிகர் சங்க பொதுக்குழுவில் வடிவேலு பேசியிருப்பதெல்லாம் தேவையில்லாத ஒன்று. இப்போது கைகளில் மொபைல் வைத்திருக்கும் அத்தனை பேருமே பத்திரிகையாளர்கள்தான். அவர் பீக்கில் இருந்தபோது அவரது வீட்டு காம்பவுண்டில் அவரை பற்றி எக்குத்தப்பாக எழுதிவிட்டு செல்வார்கள். அப்போது நான் ஒரு பிரபல புலனாய்வு பத்திரிகையில் சினிமா பத்திரிகையாளராக இருந்தேன். இந்த விஷயம் பெரிதானதை அடுத்து பிஆர்ஓ மூலம் வடிவேலுவிடம் பேசினேன். அவரும் நடந்தவற்றை சொன்னார். அவருக்கு மட்டும் அப்போது அப்படி நடக்கவில்லை. நடிகை மும்தாஜுக்கும் மிரட்டல் வந்தது. எனவே இரண்டு பேருக்கும் நடந்ததை சேர்த்து எழுதினேன். பிறகுதான் நடிகர் சங்கம் அதில் தலையிட்டு பிரச்னையை முடித்து வைத்தது.
பாடு படுத்தினார்: வடிவேலு இப்போது யூடியூபர்களையும், தயாரிப்பாளர்கள் அடுத்த படத்தை பணம் கொடுத்து காலி செய்கிறார்கள் என்றும் பேசியிருக்கிறார். அவர் எத்தனை தயாரிப்பாளர்களை என்ன பாடு படுத்தியிருக்கிறார் என்று அவருடன் நடித்த நடிகர்களிடம் கேட்டால் தெரியும். இப்படி பொத்தாம் பொதுவாக வடிவேலு பேசியிருக்கக்கூடாது. சோஷியல் மீடியா வளர்ச்சி என்னவென்றே அவருக்கு தெரியவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











