ரம்பா வீட்டில் நடந்த ரெய்டு?.. சிக்கிய கவுண்டமணி?.. இவ்வளவு நடந்திருக்கா? என்ன பிரபலம் இப்படி சொல்றாரு?
சென்னை: கவுண்டமணி இப்போது நடிப்பதை நிறுத்திவிட்டாலும் பல காமெடி சேனல்களில் அவர்தான் கிங்காக இருக்கிறார். அவரது காமெடிகள் தலைமுறைகள் கடந்தும் கொண்டாடப்படுவதை வைத்தே சொல்லலாம் அவர் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று. இந்நிலையில் அவர் பற்றி பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது.
கவுண்டமணி தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. அவர் நின்றால், நடந்தால், பேசினால் என அத்தனையிலும் காமெடி இருக்கும். அவர் நடித்ததாலேயே 80களின் பிற்பகுதியிலும், 90களிலும் பல படங்கள் வெற்றியடைந்திருக்கின்றன. அவர் ஒரு கவுண்ட்டர் போட்டால் போதும் இல்லை செந்திலை எட்டி உதைத்தால் போதும் அந்தப் படத்தை கண்ணை மூடிக்கொண்டு விநியோகஸ்தர்கள் வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விமர்சனத்தை சந்தித்த கவுண்டமணி: அதேசமயம் அவர் செந்திலை ஒரு அடிமை போல்தான் திரைப்படங்களில் ட்ரீட் செய்தார்; மற்றவர்களை உருவ கேலி செய்தும், மட்டமாக பேசியும்தான் தன்னுடையை வளர்ச்சியை அடைந்தார் என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை. இருப்பினும் அந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து அவரது கொடிதான் பல வருடங்களுக்கு கோலிவுட்டில் உயர பறந்தது.

ஒதுங்கிய கவுண்டமணி: 90களில் காலங்கள் மாற காட்சிகளும் மாறின. இவர் உச்சத்தில் இருந்தபோது உள்ளே வந்த வடிவேலு, விவேக் ஆகியோர் தங்களது காமெடிகளில் தனி பாணியை பின்பற்ற கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கினார் கவுண்டமணி. அவர் திரைத்துறையிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒதுங்கினாலும் அவரது காமெடிகள் பழசு ஆகவே இல்லை. பலரது காமெடிகளில் அவரது காமெடிகள்தான் இருக்கின்றன் என்பது கவுண்ட்டர் ரசிகர்களின் நிலைப்பாடு.
சபிதா ஜோசப் பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான சபிதா ஜோசப் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "கவுண்டமணி ஆஃப் கேமராவில்கூட எல்லோரையும் கலாய்த்துக்கொண்டுதான் இருப்பார். ஒருமுறை செந்திலிடம் நான், 'கவுண்டர் இப்படி உங்களை எட்டி உதைக்கிறாரே. நீங்களும் அப்படி செய்யலாமே' என்று கேட்டேன். அதற்கு அவரோ, 'ம்ம்கும் அது இல்லை. அவர் என்னை உதைத்தால்தான் மக்கள் ரசிப்பார்கள்' என சொன்னார்.
கவுண்டமணி இல்லையென்றால் செந்தில் இல்லை: செந்தில் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறார் என்றால் கவுண்டமணிதான் காரணம். அவர் இல்லையென்றால் செந்தில் இல்லை. இரண்டு பேரும் ரொம்பவே பாசமாக இருப்பார்கள். அவர் அப்போதே எட்டு மணி நேரத்துக்கு 2 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினார். செந்திலுக்கு 50,000 ரூபாய் சம்பளம். தனக்கு வந்த சம்பளத்தை வைத்து பல ஊர்களில் செந்தில் இடம் வாங்கி போட்டிருக்கிறார்.
ரம்பா வீட்டில் ரெய்டு: பெண்கள் விஷயத்தில் கவுண்டமணியை பலரும் பல விதமாக சொல்வார்கள். யாரிடமும் சான்ஸ் வாங்கித்தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றமாட்டார். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை சரியாக கொடுத்துவிடுவார். ஒருமுறை நடிகை ரம்பாவின் வீட்டில் ரெய்டு நடந்ததாகவும், அப்போது கவுண்டமணி ரம்பாவுக்கு கொடுத்திருந்த 25,000 ரூபாய் சிக்கியதாகவும் ஒரு செய்தி படித்திருக்கிறேன். ரம்பாவுக்கு நட்பு ரீதியாகக்கூட அந்தப் பணத்தை கவுண்டர் கொடுத்திருக்கலாம்" என்றார். சபிதா ஜோசப் இப்படி பேசியிருப்பது பெரும் கவனத்தை ஈர்த்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











