இப்படி செய்யாதீங்க ரோபோ சங்கர்.. தனுஷ் முதல் எஸ்கேவரை செய்த அட்வைஸ்.. கடைசியில் நடந்தது இதுதானாம்

சென்னை: ரோபோ சங்கரின் உயிரிழப்பு தமிழ் திரையரங்கில் பெரிய சோகத்தை உண்டு பண்ணி இரக்கிறது திரைத் துறையில் இரந்து பலரும் நேரில் சென்று ரோபோ சங்கரின் உடலுக்கு தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள் இன்னும் சற்று நேரத்தில் இறுதிச் சடங்குகளும் ஆரம்பமாக உள்ளன. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் வெங்கடேஷ் ரோபோ சங்கர் குறித்து பேசியிருக்கும் விஷயம் பலருக்கும் ஷாக்கை கொடுத்திருக்கிறது.

தனுஷ் நடித்த மாரி படத்தின் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் ரோபோ சங்கர். முதல் படத்திலேயே அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் அவருக்கு நல்ல பெயரையும் அடுத்தடுத்த வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுத்தன. தொடர்ந்து தனக்கு வந்த வாய்ப்புகளை பயன்படுத்தி தன்னுடைய நடிப்பில் முடிந்த அளவு வித்தியாசத்தை காண்பித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார் ரோபோ சங்கர்.

கண்டத்திலிருந்து தப்பித்தார் ரோபோ: நிலைமை இப்படி இருக்க திடீரென அவருக்கு கடந்த வருடத்தில் உடல் நலம் சரியில்லாமல் போனது. அளவுக்கு அதிகமாக மது குடித்ததால்தான் அவரது கல்லீரல் பிரச்சனையை சந்தித்தது. அதனை அவருமே பல பேட்டிகளில் உறுதிப்படுத்தி இருக்கிறார். ஆங்கில மருத்துவம், நாட்டு வைத்தியம் என வைத்திய முறைகளை பின்பற்றி அந்த பிரச்னைகளில் இருந்து தற்காலிகமாக வெளியே வந்திருந்தார் ரோபோ சங்கர். அதுமட்டுமின்றி குடிப்பழக்கத்தையும் அறவே நிறுத்தி இருந்தார். இது அவரது குடும்பத்தினருக்கு பெரிய மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுத்தது.

மீண்டும் உடல்நல குறைவு: சிகிச்சையில் இருந்து மீண்டவர் தேசிங்கு ராஜா 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். மேற்கொண்டு பல படங்களில் கமிட்டாகவும் செய்தார். இப்படிப்பட்ட நிலைமையில் சில நாட்களுக்கு முன்பு அவர் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டதாகவும் அந்த சமயத்தில் அவர் மயக்கம் போட்டு விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Journalist Venkatesh has said that Dhanush and Sivakarthikeyan advised Robo Shankar
Photo Credit:

உயிரிழந்த ரோபோ சங்கர்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு உயிரிழந்தார்,. அவரது உடலுக்கு திரைத்துறையிலிருந்து பலரும் அஞ்சலி செலுத்தி தங்களது இரங்கல் தெரிவித்துவருகின்றனர். நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சங்கரின் குடும்பத்தினருக்கு தங்கள் ஆறுதலை தெரிவித்தார்கள். முக்கியமாக தனுஷ் வந்தபோது அவரிடம் சங்கரின் மகளும் மனைவியும் கதறி அழுதது அங்கு இருப்பவர்களை கலங்கடிக்க செய்தது.

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான வெங்கடேஷ் ரோபோ சங்கரின் மறைவு குறித்து தனியார் youtube சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார்.அந்த பேட்டியில் பேசிய வெங்கடேஷ், "மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ எக்கனாமிக்ஸ் படித்தவர் ரோபோ சங்கர். நன்றாக படித்தவராக இருந்தாலும் கலைத்துறை மீதிருந்த ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்தார். 1997லேயே விஜயகாந்த் படத்தில் சிறிய ரோலை ஏற்றிருந்தார் அவர்.

அட்வைஸ் செய்த நடிகர்கள்: பிறகு கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஃபேமஸ் ஆனார். அவரது திறமையை உணர்ந்த தனுஷ் தன்னுடைய மாரி படத்தில் வாய்ப்பு கொடுத்தார். சங்கரும், தனுஷும் ரொம்பவே க்ளோஸ். இதற்கு முன்னதாக ரோபோ சங்கருக்கு உடல்நிலை சரியில்லாதபோது பெரிய அமௌண்ட் ஒன்றை தனுஷ் கொடுத்திருந்தார். அந்த சிகிச்சைக்கு பிறகு குடியை நிறுத்தியிருந்தார். ஆனால் கடந்த சில காலமாக அவர் மீண்டும் குடித்தார் என்று சொல்லப்படுகிறது. இப்படி செய்ய வேண்டாமே ரோபோ சங்கர் என தனுஷ், சிவகார்த்திகேயன் என பலரும் அட்வைஸ் செய்ததாகவும் சொல்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு ஒரு ஷூட்டிங்கில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்திருக்கிறார். அவரது உயிரிழப்பு திரைத்துறையினருக்கு பெரிய இடிதான். இருந்திருந்தால் இன்னும் பல சாதனைகளை செய்திருப்பார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X