பல பெண்கள் மாதம்பட்டி ரங்கராஜால் பாதிப்பு.. என்னிடமே சொன்னார்கள்.. ஜாய் கிரிஸில்டா போட்ட புது குண்டு
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரை அடுத்து இந்த விவகாரம் புது புது அதிர்ச்சியை கொடுத்துவருகிறது. தன் மீது அவதூறு பரப்புகிறார்; எனவே தன்னை பற்றி பேசுவதற்கு ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மாதம்பட்டி ரங்கராஜ் வைத்த கோரிக்கையை நீதிமன்றம் சமீபத்தில் நிராகரித்தது. இந்நிலையில் புது பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.'
மாதம்பட்டி ரங்கராஜை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ஜாய் கிரிஸில்டா இப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். முதல் திருமண வாழ்க்கைதான் சுமூகமாக இல்லை; இந்தத் திருமண வாழ்க்கையாவது நல்லபடியாக இருக்கும் என்று நினைத்திருந்தார். ஆனால் தன்னை கர்ப்பமாக்கி மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் அவர்.
தீவிர விசாரணை: அதனையடுத்து அந்தப் புகார் பெண்களுக்கு எதிரான குற்றத்தை தடுக்கும் பிரிவு அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் சில வாரங்களுக்கு முன்பு ஜாய் கிரிஸில்டாவிடம் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். விரைவில் ரங்கராஜிடமும் விசாரிக்கவிருக்கிறார்கள். விசாரணையை முடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஜாய், 'நீதி மீது நம்பிக்கை இருக்கிறது' என்று குறிப்பிட்டிருந்தார்.

ரங்கராஜுக்கு செக்: இதற்கிடையே தன்னைப் பற்றி ஜாய் கிரிஸில்டா அவதூறாக பேசுகிறார்; அவர் வெளியிடும் வீடியோக்கள், புகைப்படங்களால் தனது பெயருக்கு தன்னுடைய நிறுவனத்துக்கும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. எனவே அவர் தன்னை பற்றி பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மாதம்பட்டி ரங்கராஜும் நீதிமன்ற படிகள் ஏறினார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அதெல்லாம் தடை விதிக்க முடியாது என்று அதிரடி உத்தரவிட்டார்.
மகிழ்ச்சியில் ஜாய்: நீதிபதியின் இந்தத் தீர்ப்பு கிரிஸில்டாவுக்கு உச்சக்கட்ட சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. மேலும் அதுதொடர்பாக ஏகப்பட்ட ஸ்டேட்டஸ்க்ளை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துவருகிறார். அதுமட்டுமின்றி தனியாக நின்றாலும் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் இன்று அவர் சென்னையில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
பல பெண்கள் பாதிப்பு: பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், "மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பிலிருந்து எனக்கு மிரட்டல் இதுவரை வரவில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் எனக்கும், எனது குழந்தைக்கும் ஏதேனும் நடந்தால் அதற்கு முழுக்க முழுக்க ரங்கராஜ்தான் பொறுப்பு. அவரால் நான் மட்டுமில்லை நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனை அந்தப் பெண்களே என்னிடம் சொன்னார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











