ஃபோட்டோ வெளியிட்டு ஜாய் கிரிஸில்டா அட்டாக்.. அப்பாவா மாதம்பட்டி ரங்கராஜுக்கு தகுதி இல்லையாம்

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ஜாய் கிரிஸில்டாவுக்கு நேற்று முன் தினம் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று குழந்தையின் கைகளை புகைப்படம் எடுத்து வெளியிட்டு ரங்கராஜின் கார்பன் காப்பி என்று தெரிவித்திருந்த கிரிஸில்டா இன்று அவரை கடுமையாக அட்டாக் செய்து போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் பெரிய கவனத்தை பெற்றிருக்கிறது.

பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குநர் ஜெ.ஜெ.ஃபெட்ரிக்கை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற ஜாய் கிரிஸில்டாவுக்கு சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி பிறகு திருமணத்தில் சென்று முடிந்திருக்கிறது. முதலில் இத்திருமணம் பற்றி பொதுவெளிக்கு தெரியவில்லை. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும்.

புகைப்படம் வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா: இந்தத் திருமணத்தை அவர்கள் சட்டப்பூர்வமாக பதிவு செய்யவில்லை என்றும் தெரிகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் ரங்கராஜுடன் நடந்த திருமண புகைப்படங்களை சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். அதுமட்டுமின்றி தன்னை அவர் ஏமாற்றிவிட்டதாகவும்; தனக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு அவர்தான் தந்தை என்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரும் கொடுத்திருந்தார் கிரிஸில்டா.

Joy Crizildaa Attacks Mathampatty Rangaraj on Instagram After Baby Boy s Birth Mentions Him as Father in Birth Certificate
Photo Credit:

குழந்தை பிறந்தது: தொடர்ந்து இந்த விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருந்த நிலைமையில் இரண்டு பேரிடமும் மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது. முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில் தனக்கு மாதம் 6.50 லட்சம் ரூபாய் செலவுக்கு தர வேண்டும் என்று மனுத்தாக்கலும் செய்திருந்தார் ஜாய். இது ஒருபக்கம் இருக்க நேற்று முன்தினம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனை அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அறிவித்திருந்தார்.

ரங்கராஜின் கார்பன் காப்பி: தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள். பல பிரச்னைகளுக்கு மத்தியில் இந்த பூமிக்கு வந்திருக்கும் அந்த பிஞ்சுக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்தார்கள். அதுமட்டுமின்றி இந்தக் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை என்பதால் விரைவில் நல்லதொரு முடிவை அவர் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் சோஷியல் மீடியாவில் எழுந்திருக்கின்றன. அதேசமயம் மகன் பிறந்தது பற்றி எதுவும் பேசாமல் சைலெண்ட் மோடிலேயே இருக்கிறார் மாதம்பட்டியார்.

ஜாய் கிரிஸில்டா அட்டாக்: நேற்றுகூட குழந்தையின் கைகளை புகைப்படம் எடுத்து ரங்கராஜின் கார்பன் காப்பி என்று குறிப்பிட்டிருந்தார் கிரிஸில்டா. இந்நிலையில் தற்போது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதாவது தனது மகனுக்கு பிறப்பு சான்றிதழ் பெற்றிருக்கும் அவர்; தந்தை ரங்கராஜ் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி அப்புகைப்படத்தோடு, 'உங்களுக்கு இதற்கு தகுதியே இல்லை. ஆனாலும் வலியோடு இந்த பெருமையை உங்களுக்கு கொடுக்கிறேன்' என வேதனையான கேப்ஷனை போட்டிருக்கிறார். இப்புகைப்படமும் இப்போது ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X