பழகுனத மறக்கலையே.. அந்த பருவம் இப்ப கிடைக்கலையே.. மாதம்பட்டி ரங்கராஜ் செம கூல்.. சேட்டைய பார்த்தீங்களா?

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா விவகாரம் இப்போதைக்கு ஓயாது என்றே பலராலும் கருதப்படுகிறது. இத்தனை நாட்கள் அமைதியாக ரங்கராஜ் நேற்று ஒரு விளக்கம் அளித்தார். அதனையடுத்து ஜாயும் தனது பங்குக்கு ஏகப்பட்ட ஸ்டேட்டஸ்களை வைத்துவருகிறார். இந்நிலையில் ரங்கராஜின் இன்னொரு இன்ஸ்டா பதிவை பார்த்த ரசிகர்கள் அட இவர் செம கூலா ஹேண்டில் செய்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துகொண்ட மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவையும் திருமணம் செய்தார். முதல் மனைவியை அவர் விவாகரத்து செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தங்களுக்கு நடந்த திருமண புகைப்படங்களை ஜாய் வெளியிட்டுதான் இந்த விவகாரம் பொதுவெளிக்கு வந்தது. அப்போதிருந்து பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இரண்டு பேருமே சட்டத்தின் மூலம் இதற்கு தீர்வு காண்பதற்கு முடிவு செய்திருக்கிறார்கள்.

ரங்கராஜின் விளக்கம்: கடந்த சில மாதங்களாகவே இந்த விஷயம் கோலிவுட்டின் ஹாட் டாபிக்குளில் ஒன்று. ஆனால் ரங்கராஜோ எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். இனியும் அமைதியாக இருந்தால் சரியாக இருக்காது என்று நினைத்த அவர் நேற்று ஒரு விளக்கமளித்தார். அந்த விளக்கத்தில், அனைவருக்கும் வணக்கம், நீதிமன்றத்திற்கு வெளியே திருமதி ஜாய் கிரிசில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையைத் தீர்த்து வைக்குமாறு பல நபர்கள் என்னை அணுகி வருகின்றனர். நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையும், சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும். இந்த சர்ச்சையைத் தீர்க்க நான் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளேன் என்பதையும் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன்.

Joy Crizildaa controversy Madhampatty Rangaraj s Instagram post has garnered attention
Photo Credit:

நான் விரும்பவில்லை: இந்தப் பிரச்னை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபடவோ, ஊக்குவிக்கவோ அல்லது பதிலளிக்கவோ நான் விரும்பவில்லை. ஆன்லைன் ஊடகங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்த கருத்துகளையும், அனுமானங்களையும் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

விடாத ஜாய் கிரிஸில்டா: மாதம்பட்டி ரங்கராஜின் இந்த விளக்கத்தையும் வைத்து செய்துவருகிறார் ஜாய் கிரிஸில்டா. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'ஹலோ கணவரே மாதம்பட்டி ரங்கராஜ். முதலில் நீங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க. விசாரணைக்கு வாங்க' என்றும், நீங்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் ஸ்டோரி வைத்திருந்தார்.

ரங்கராஜின் ஸ்டோரி: ஜாயின் அந்த ஸ்டோரிகள் இணையத்தில் ட்ரெண்டாகின. மேலும் இந்த விஷயத்தில் மாதம்பட்டியின் கைகள் ஓங்குமா இல்லை கிரிஸில்டாவின் கைகள் ஓங்குமா என்ற எதிர்பார்பு பலமாக எழுந்திருக்கிறது. இப்படி தன்னை சுற்றி பெரும் பரபரப்பு பற்றி எரிந்துகொண்டிருந்தாலும் ரங்கராஜ் செம கூலாக இருக்கிறார் என்றே தெரிகிறது. அதாவது பிரபல நடிகர் புகழ்; ரங்கராஜுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை பகிர்ந்திருந்தார். அதனை தனது ஸ்டோரியில், நட்புக்காக படத்தில் வரும் மீசைக்கார நண்பா பாடலில் இருக்கும் பழகுனத மறக்கலையே வரிகளை சேர்த்து வைத்து ஸ்டோரியாக போட்டிருக்கிறார் ரங்கராஜ். இதனைப் பார்த்த நெட்டிசன்ஸ், 'எப்படி பாஸ் இவ்வளவு கூலா ஹேண்டில் செய்றீங்க' என்று கேள்விகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X