குற்ற உணர்ச்சியே இல்லாம அலையுறான்.. குழந்தை சாபம் விடாது.. மாதம்பட்டி ரங்கராஜை இறங்கி அடித்த ஜாய் கிரிஸில்டா
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா புகார் கொடுத்ததிலிருந்து இந்த விவகாரம் மேலும் பற்றி எரிய தொடங்கியிருக்கிறது. கடந்த வாரத்தில் ஜாயிடம் காவல் துறையினர் தங்களது விசாரணையை தொடங்கினார்கள். விரைவில் மாதம்பட்டி ரங்கராஜிடமும் விசாரணையை தொடங்க அவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டியாரை இறங்கி அடித்திருக்கிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்ததும்; பிறகு அவர் மீது ஜாய் புகார் அளித்ததும் அனைவரும் அறிந்ததே. அவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கானது பெண்கள் மீதான குற்றத்தை தடுக்கும் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அந்த பிரிவை சேர்ந்த அதிகாரிகள் கடந்த வாரத்தில் ஜாயிடம் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் பல விஷயங்களை அவர் வெளிப்படுத்தியதாகவும் சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் மாதம்பட்டியாரிடம் விசாரணை: அந்த விசாரணைக்கு பிறகு மிக விரைவில் மாதம்பட்டி ரங்கராஜிடமும் காவல் துறையினர் விசாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். அவரிடம் விசாரணை செய்கையில் அவர் தரப்பு விஷயங்களை அவர் எடுத்து வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவியான ஸ்ருதியின் அமைதி இன்றுவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விடாத கிரிஸில்டா: இதற்கிடையே தன்னை பற்றி அவதூறான வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியிடப்படுவதால் தன்னுடைய நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் இழப்பீடு ஏற்பட்டிருப்பதாகவும்; அந்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் டெலிட் செய்ய உத்தரவிடுமாறும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் மாதம்பட்டி ரங்கராஜ். ஆனால் அதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாமல் தொடர்ந்து மாதம்பட்டி தொடர்பான வீடியோக்களையும் போட்டோக்களையும் பகிர்ந்துகொண்டே இருந்தார் கிரிஸில்டா.
கலாய்த்த குரேஷி: அவர் வெளியிட்ட வீடியோக்களை பார்த்து குக் வித் கோமாளி குரேஷிகூட ரங்கராஜை கிண்டல் செய்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதுமட்டுமின்றி கடந்த வாரத்தில்கூட தனக்கு பெண் குழந்தை பிறந்தால் ராகா ரங்கரஜ் என்ற பெயர் வைப்பேன் என்றும்; ரங்கராஜ் விட்டுவிட்டு போனாலும் குழந்தைக்கு தான் என்றும் துணையாக இருப்பேன் என்றும் ஜாய் கூறியிருந்தது நினைவுகூரதக்கது.
இப்போதைய போஸ்ட்: இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "ஒருத்தன் குற்ற உணர்ச்சியே இல்லாம அலையுறான். பெருமையாக தலையெழுப்பிக்கிட்டு நடக்கிறான்.. நீ உன்னை ஒரு உத்தமன் போல் காட்டிக்கொண்டு சுற்றிக்கிட்டே இருக்கிறார்ய்.. உன்னைப் போன்ற மனிதாபிமானம் இல்லாத ஒருவனை யாரும் பார்த்திருக்க முடியாது. நீங்க ஓடினாலும் சரி, ஒளிந்தாலும் சரி.. கருவில் இருக்கும் உன் குழந்தையின் சாபம் உன்னை நிழலாகவே தொடரும்.. ஒருநாளும் உன்னை விட்டு போகாது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











