எப்படி டா நிம்மதியா உன்னால சோறு திங்க முடியுது.. தனுஷை வைத்து மாதம்பட்டி ரங்கராஜை சிதைத்த ஜாய் கிரிஸில்டா

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார் என்று ஜாய் கிரிஸில்டா அளித்த புகாரை அடுத்து இரண்டு பேரிடமும் சில நாட்களுக்கு முன்பு மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது. அந்த விசாரணைக்கு ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதுவும் பெரிய சர்ச்சையையும், விவாதத்தையும் சமூக வலைதளங்களில் கிளப்பியிருந்தது.

பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஃபெட்ரிக்கின் முன்னாள் மனைவி ஜாய் கிரிஸில்டா. அவருக்கும், பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. ஆனால் அவர் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரிலிருந்து விவகாரம் பற்றி எரிய தொடங்கியது.

தினமும் பரபரப்புதான்: இவ்விஷயம் பூதாகரமானதிலிருந்து மாதம்பட்டி ரங்கராஜை தொடர்ந்து அட்டாக் செய்துவருகிறார் ஜாய் கிரிஸில்டா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட வீடியோக்களையும், புகைப்படங்களையும் அவர் இறக்கிக்கொண்டே இருக்க; அதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற நினைப்பில் நீதிமன்றத்துக்கு சென்றார் மாதம்பட்டி. ஆனால் அவருக்கு செக் மேட் வைத்து அனுப்பியது கோர்ட்.

Joy Crizildaa has attacked Madhampatty Rangaraj using a scene from Dhanush s film Raayan
Photo Credit:

இரண்டு பேரிடமும் விசாரணை: இதனையடுத்து இந்தப் பிரச்னையை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட சூழலில் சம்பந்தப்பட்ட இரண்டு பேரிடமும் மகளிர் ஆணையம் சில நாட்களுக்கு முன்பு விசாரணை நடத்தியது. அந்த விசாரணைக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் வந்திருந்தார். ஸ்ருதியும் வழக்கறிஞர் என்பதால் அவர் வந்திருப்பார் என்று கருதப்பட்டது.

இதுவும் விவாதம்தான்: ஆனால் நீதிமன்றத்துக்கு மாதம்பட்டி ரங்கராஜுடன் ஸ்ருதி வந்திருந்ததும் பெரிய விவாதத்தை சோஷியல் மீடியாவில் கிளப்பியது. விவாகரத்தே செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்த ஒருவருக்கு இதுபோன்று முதல் மனைவி சப்போர்ட் செய்வதால்தான் ஆண்கள் தொடர்ந்து தவறு இழைத்துவருகிறார்கள் என்பதுதான் பல பேரின் கருத்தாக இருந்தது. மேலும், இவ்வளவு பெரிய துரோகத்தை செய்த மாதம்பட்டியை கொஞ்சமும் யோசிக்காமல் ஸ்ருதி தூக்கி எறிந்திருக்க வேண்டாமா என்றும் கேள்விகளை முன்வைத்துவருகிறார்கள்.

ஜாய் கிரிஸில்டாவின் அட்டாக்: இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா வைத்திருக்கும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதாவது ராயன் படத்தில் தனுஷ் சந்தீப் கிஷனை பார்த்து, 'உன்னால சும்மாவே இருக்க முடியாத்தாடா?.. எப்படி டா நிம்மதியா சோறு திங்க முடியுது?" என்று பேசும் வசனத்தை தனது ஸ்டோரியில் வைத்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்களோ, மாதம்பட்டி ரங்கராஜைத்தான் இந்த ஸ்டோரியில் ஜாய் கிரிஸில்டா ஹெவியாக அட்டாக் செய்திருக்கிறார். அவர் வைக்கும் ஒவ்வொரு ஸ்டோரியும் இப்படி பலத்த அடியை ரங்கராஜுக்கு கொடுக்கிறதே என்று பேசிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X