புது புகைப்படத்தை இறக்கிய ஜாய் கிரிஸில்டா.. மாதம்பட்டி ரங்கராஜ் செம நெருக்கமா இருக்காரே.. பற்றி எரியுது
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா சில நாட்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதனையடுத்து தன்னை பற்றி அவதூறு பரப்புகிறார் என ரங்கராஜும் அவர் பங்குக்கு நீதிமன்றம் சென்றார். ஆனாலும் தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து ரங்கராஜும், தானும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார் ஜாய்.
தமிழ்நாடு அளவில் ஃபேமஸான மாதம்பட்டி ரங்கராஜ் மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப் படத்தில் நல்லபடியாக அவர் பெயர் எடுத்தாலும் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அதேசமயம் தன்னுடைய தொழிலான சமையலில் தொடர்ந்து உயரம் சென்றுகொண்டே இருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்றிருக்கிறார் அவர்.
இரண்டாவது திருமணம்: அவர் ஏற்கனவே ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள். சூழல் இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ரங்கராஜுடன் திருமண கோலத்தில் இருக்கும் ஃபோட்டோக்களை வெளியிட்டார். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணம் செய்துவிட்டார் என்று சர்ச்சைகள் எழுந்தன. ரங்கராஜ் அமைதியே காத்தார்.

புகார் கொடுத்த ஜாய்: சூழல் இப்படி இருக்க திடீரென சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார் என்று புகார் கொடுத்தார். அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ரங்கராஜின் இந்த செயல் வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் பலர் திட்டி தீர்க்க ஆரம்பித்தார்கள். புகார் மட்டுமின்றி தன்னுடன் அவர் நெருக்கமாக இருந்தது, தன்னிடம் குழைந்து குழைந்து பேசியது உள்ளிட்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டிருந்தார்.
வழக்கு தொடர்ந்த மாதம்பட்டி: நிலைமை தொடர்ந்து இப்படி சென்றுகொண்டிருப்பதை பார்த்த ரங்கராஜ் நீதிமன்றத்தில், ஜாய் கிரிஸில்டா மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். மேலும் அந்த ஃபோட்டோக்கள், வீடியோக்களை டெலிட் செய்ய உத்தரவிட வேண்டுமென்றும் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் ஜாய் அதற்கெல்லாம் மடிந்ததாக தெரியவில்லை. தனது பிறந்தநாளுக்கு தன்னுடன் ரங்கராஜ் இருந்த முழு வீடியோவையும் வெளியிட்டார்.
புதிய புகைப்படங்கள்: இந்நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று புதிதாக சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அதில் வெளிநாட்டில் ஜாயுடன் மாதம்பட்டி ரங்கராஜ் என்ஜாய் செய்யும் ஃபோட்டோக்கள் இருக்கின்றன. மேலும் அந்தப் புகைப்படங்களோடு உங்களது சொந்த குழந்தையின் கதையிலிருந்தே மறைந்துவிட்டீர்கள். குற்ற உணர்வு இல்லை, வெட்கமாக இல்லை,ஒரு தந்தையாக இருக்க வேண்டிய இடத்தில் மௌனம் மட்டுமே இருக்கிறது. இந்தப் புகைப்படங்களை எடுத்தது எனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











