ஜாய் கிரிஸில்டா என்ன வீடியோ போடுறது?.. மாதம்பட்டி ரங்கராஜ் போட்ட வீடியோ பாருங்க.. கெத்து காட்டுறாரே

சென்னை: சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட புகைப்படம் அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் அவர் தனது முதல் மனைவியான ஸ்ருதியை விவாகரத்து செய்யாமலேயே கிறிஸ்டிலாவை திருமணம் செய்திருந்தார். தற்போது அந்த பிரச்னை நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே செல்கிறது.

தமிழ்நாட்டில் பிரபல சமையல் கலைஞராக விளங்குபவர் மாதம்பட்டி ரங்கராஜ். சமையல் கலைஞராக மட்டுமின்றி மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானவர் அந்த படத்தில் சொல்லிக் கொள்ளும்படியான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு ஹீரோ மெட்டீரியல்தான் என்பதை ரசிகர்களுக்கும், திரைத்துறையினருக்கும் உணர்த்தினார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை அந்த படத்துக்கு பிறகு வேறு எந்த படத்திலும் அவர் தலை காட்டவே இல்லை. அதேசமயம் சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செம ஃபேமஸ்: நடிகராக அவர் அறிமுகமாவதற்கு முன்னதாகவே தமிழ்நாடு முழுவதும் பெரும் பிரபல்யத்தை கொண்டிருந்தவர் ரங்கராஜ். பெரிய வீட்டு விசேஷங்களுக்கு மறக்காமல் தனது டீமுடன் சமையல் செய்வதற்கு களம் இறங்கி தனது அசத்தலான சமையலாலும், பக்குவமான செயல்களாலும் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர். மாதம்பட்டி ரங்கராஜ் அதன் காரணமாகத்தான் தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவிலும் சில பிரபலங்களின் விசேஷங்களுக்கும் சமைத்து இருக்கிறார்.

Joy Crizildaa has released a video today Madhampatty Rangaraj has also released a new video
Photo Credit:

சர்ச்சையில் ரங்கராஜ்: நிலைமை இப்படி சென்று கொண்டிருக்க அவர் ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். குடும்ப வாழ்க்கையை எந்தவித சண்டையும் சச்சரவும் இல்லாமல் ஓட்டிக்கொண்டிருந்த அவர் கடந்த சில காலமாகவே பிரச்னைகளில் சிக்கி வருகிறார். ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவை அவர் இரண்டாவது திருமணம் செய்ததுதான் இந்த பிரச்னையின் முதல் புள்ளி.

தினமும் வளரும் பஞ்சாயத்து: அவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அனைத்துக்கும் உச்சக்கட்டமாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துககு வந்த ஜாய்; மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாகவும் தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை என்றும் புகார் அளித்தார். மேலும் தன்னுடன் அவர் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.

ரங்கராஜ் தொடுத்த வழக்கு: ஒரு பக்கம் தொடர்ந்து வீடியோக்களையும் புகைப்படங்களையும் கிரிஸில்டா வெளியிட்ட வண்ணம் இருக்க; பொறுத்து பொறுத்து பார்த்து ரங்கராஜ் நீதிமன்றத்திற்கு சென்று அவதூறு வழக்கை தொடர்ந்தார். இருப்பினும் ஜாய் கிரிஸில்டா இன்றுகூட, தனது பிறந்தநாளுக்கு தன்னுடன் ரங்கராஜ் இருந்த வீடியோவை முழுதாக வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதம்பட்டி வீடியோ: இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது instagram பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், பிரபலம் வீட்டு நிகழ்ச்சிக்கு தனது டீமுடன் கலந்துகொண்டு வழக்கம்போல் சமையல் செய்து அசத்தியிருக்கிறார். நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் உணவு உண்ணும் வீடியோ, மாதம்பட்டியாருடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட காட்சிகள், செந்தில் பாலாஜி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுடன் ரங்கராஜ் பேசும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றன. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X