Joy Crizildaa: மாதம்பட்டி ரங்கராஜ் கப்சிப்.. விடாது துரத்தும் ஜாய் கிரிஸ்டா.. வைரலாகும் புது போஸ்ட்!
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக இருக்கும் நிலையில் கைவிட்டு சென்றுவிட்டார் என ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திருமண மோசடி செய்ததாக புகார் அளித்தார். இதுகுறித்து முறையாக விசாரணை நடைபெறாததால், மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜாய் கிரிஸில்டா இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டு மாதம்பட்டியை விடாது துரத்தி வருகிறார்.
அந்த புகாரில், ரங்கராஜ் என் கணவர், நாங்கள் இருவரும் திருமணம் செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்தோம். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக எனது தொடர்பை அவர் முற்றிலும் துண்டித்துள்ளார். நான் அவரை நேரில் சந்திக்க முயன்ற போது, என்னை அடித்தார். இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை. எனக்கும் என் குழந்தைக்கும் நேர்ந்த இந்த ஏமாற்றத்திற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். அவர் என்னுடன் சேர்ந்து வாழ போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். ஆனால், காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டை முன் வைத்து வந்தார். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் ஆன்லைன் மூலமாக புகார் அளித்தார்.

ஜாய் கிரிஸில்டா: இதைத்தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் மீதான புகார் தொடர்பாக கடந்த மாதம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் ஜாய் கிரிஸில்டா ஆஜராகி புகைப்படங்கள், செல்போன் உரையாடல் அனைத்தையும் கொடுத்து அதிகாரிகள் கேட்ட கேள்வி கிட்டத்தட்ட 6 மணி நேரம் விளக்கம் அளித்தார். அதன் பின், மாதம்பட்டி ரங்கராஜிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவர் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன் என காவல்துறை அதிகாரிகளிடம் பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
புது போஸ்ட்: இதைத்தொடர்ந்து, சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமணம் மோசடி தொடர்பாக ஜாய் கிரிசல்டா புகார் ஒன்றை அளித்தார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தனது புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜாய் கிரிஸில்டா பபுகாரில் குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் போலீசார் நேற்று ஜாய்யை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது தனது வழக்கறிஞருடன் மாநில மகளிர் ஆணைய அலுவலகத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை கொடுத்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாய் கிறிஸில்டா வழக்கறிஞர். மாதம்பட்டி ரங்கராஜை விசாரணை செய்த காவல்துறையினர் ஊடகத்திற்கு தெரியக் கூடாது என்பதற்காக பின்வாயில் வழியாக அவரை அனுப்பி இருக்கிறார்கள். வருவார்,ஏமாற்றுவார் குழந்தையை கொடுப்பார் சமுதாயத்தில் எங்குனாலும் செல்வார் அவர் மீது எந்தவொரு புகாரும் எடுக்கப்படாது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என்றார். இந்நிலையில், ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஹலோ டாடி, ஆரம்பிக்கலாமா டாடி? இன்னும் சில தினங்களில் வந்துவிடுவேன். இப்படிக்கு உங்கள் வாரிசு. Madhampatty Raha Rangaraj என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











