யார் விட்டு சென்றாலும் சத்தியமாக அப்படி இருப்பேன்.. மாதம்பட்டி ரங்கராஜ் விஷயத்தில் ஜாய் கிரிஸில்டா அதிரடி

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார் என்று ஜாய் கிரிஸில்டா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதனையடுத்து ஜாயிடம் சில நாட்களுக்கு முன்பு கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் விசாரணை செய்யப்பட்டது. நிலைமை இப்படி இருக்க அவர் தனது எக்ஸ் பக்கத்தி பகிர்ந்திருக்கும் போஸ்ட் ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கும் இரண்டாவது திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தின் விளைவாக ஜாய் கிரிஸில்டா கர்ப்பமாகவும் இருக்கிறார். ஆனால் ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார் என்றும்; தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை என்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.

நடைபெற்ற விசாரணை: மாதம்பட்டி ரங்கராஜும் ஜாய் கிரிஸில்டா மீது அவதூறு வழக்கை தொடர்ந்தார். சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு ஜாயிடம் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவினர் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் விசாரித்தார்கள். அந்த விசாரணையில் அவர் பல விஷயங்களை ஓபனாக தெரிவித்தார். அதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரைத்தான் இங்கே அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவிருக்கிறார்கள். முதல் திருமணம் முடிந்த நிலையில் என்னை அவர் திருமணம் செய்தது பற்றி கேள்வி எழுப்புகிறார்கள்.

Joy Crizildaa New Tweet About Madhampatty Rangaraj Issue
Photo Credit:

ஏமாற்றி செய்துகொண்டார்: அவர் என்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார் என்று குற்றஞ்சாட்டுகிறேன். புகாரை நான் வாபஸ் பெற வேண்டும் என்று மிரட்டவில்லை. அதுதொடர்பாக யாரும் என்னை அணுகவில்லை. எனது குழந்தைக்கு மிரட்டல் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். அதற்கான பாதுகாப்பை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். குழந்தைக்காக எந்த நிலைக்கும் சென்று போராடுவேன். இது மாதம்பட்டி ரங்கராஜின் குழந்தைதான். அவர் வெளியே ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கலாம். நான் போராடத்தான் செய்வேன்.

முதலில் என்னிடம் விசாரணை: நான் புகார் கொடுத்திருப்பதால் என்னிடம் முதலில் விசாரணை செய்தார்கள். பிறகு அவரிடம் செய்வார்கள். அவர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வார்கள் என்று கருதுகிறேன். உறுதியும் கொடுத்திருக்கிறார்கள். நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்திருக்கிறோம். அதுபற்றி தெளிவாக கூறியிருக்கிறேன். ஆறு மணி நேரம் விசாரணை நடந்தது. எனக்கு பாசிட்டிவ்வான பதிலைத்தான் கொடுத்திருக்கிறார்கள். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள்" என கூறியிருந்தார்.

புதிய போஸ்ட்: இதனையடுத்து ரங்கராஜிடம் எப்போது விசாரணை நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், ஜாய் கிரிஸில்டா தனது எக்ஸ் பக்கத்தில் புதிய போஸ்ட்டை போட்டிருக்கிறார். தனது கர்ப்பமான வயிறு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, 'ராஹா ரங்கராஜ் உனது தந்தை உன்னை விட்டு சென்றாலும் எனது இதயம், ஆன்மா, கைகள் என அனைத்தும் உனக்கு முதல் வீடாக இருக்கும். இது எனது சத்தியம். வயிற்றில் இருப்பது என்ன குழந்தை என்று நாங்கள் சோதிக்கவில்லை. எங்களுக்கு பெண் குழந்தை வேண்டுமென்பது ரங்கராஜின் விருப்பம். ஆனால் குழந்தை பிறக்கும் முன்பே தந்தையை காணவில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X