தொடர்ந்து டார்ச்சர்.. மாதம்பட்டி ரங்கராஜ் உடன் இருக்கும் முழு வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா
சென்னை: சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை 2வதாக திருமணம் செய்து விட்டு ஏமாற்றிவிட்டார் என்று ஜாய் கிரிஸில்டா புகார் அளித்துள்ளார். மேலும், அவருடன் எடுத்துக்கொண்ட எடுத்த பழைய புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் அவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பிறந்த நாள் கொண்டாடிய முழுவீடியோ ஜாய் தற்போது வெளியிட்டுள்ளார்.
பிரபல ஆடை வடிவமைப்பாளரானர் ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராமில், மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் 2023 ஆம் ஆண்டு திருமணம் நடந்ததாகவும், தற்போது கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஸ்ருதி என்கிற மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கும் நிலையில், ஜாய் கிரிஸில்டாவை எப்படி அவர் 2வது திருமணம் செய்ய முடியும் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டார் என ஜாய் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கூறியிருந்தார்.

ஜாய் கிரிஸில்டா: இதையடுத்து, ஜாய் கிரிஸில்டா, யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், மாதம்பட்டி ரங்கராஜ், தன்னிடம் எவ்வளவு பாசமாக பழகினார், இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக ஒரே வீட்டில் வந்தோம் என அதற்கான பல ஆதாரங்களை வெளியிட்டார். ஜாய்யின் வீடு முழுக்க அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள், மாதம்பட்டி ரங்கராஜ் வாங்கிய விருதுகள் என அனைத்தும் திரும்பி இருந்தது. குழந்தை வேண்டாம் என்றால், இதனால் இதற்கு முன்பே இரண்டு முறை கருவை கலைத்தேன் ஆனால், இந்த முறை கருவை கலைக்க முடியாமல் போய்விட்டது. இந்த குழந்தை பிறந்தால், லீகலாக பிரச்சனை வரும் என்பதற்காக என்னை பிரிந்து சென்றுவிட்டார் என, அந்த பேட்டியிலேயே ஜாய் கிரிஸில்டா பேசி இருந்தார்.
சர்ப்ரைஸ் வீடியோ: இதையடுத்து, ஜாய் கிரிசில்டா, பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோவை பதிவிட்டு இருந்தார் அதில், கடற்கரையில் மாதம்பட்டி ரங்கராஜை கண்ணைக்கட்டி ஜாய் அழைத்து வர, ஹேப்பி பர்த்டே என என வண்ண விளக்குகால் எழுதப்பட்டு இருந்தது. மேலும், இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோக்கள் என அந்த கடற்கரையே விளக்கு வெளிச்சத்தில் ஜொலித்தது. இதைப்பார்த்து எமோஷனால் ஆன மாதம்பட்டி ரங்கராஜ், முட்டி போட்டு, பூங்கொத்து கொடுத்து ஜாயிடம் தனது காதலை சொல்லி இருந்தார். அதோடு மட்டுமில்லாமல், பல ஜென்மம் தாண்டி வந்த உறவே என கூறி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, இப்படி எல்லாம் காதலித்து விட்டு, அந்த பெண்ணை ஏமாற்றி விட்டாரே என பலரும் கூறிவந்த நிலையில், தற்போது ஜாய் கிரிஸில்டா, பிறந்த நாளுக்கு எடுத்த முழு வீடியோவை பகிர்ந்துள்ளார். பொதுமக்கள் தொடர்ந்து கேட்டதால், இந்த வீடியோவை பதிவிடுகிறேன் என ஜாய் அதில் பதிவிட்டுள்ளார்.
ஜாய் கிரிஸில்டா மீது வழக்கு: மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிஸீல்டாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அவதூறாக பேசி வெளியிட்ட வீடியோக்களை நீக்க உத்தரவிட கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். அதே போல, மாதம்பட்டி ரங்கராஜ் பங்குதாரராக இருக்கும் மாதம்பட்டி பிரைவேட் லிமிட் நிறுவனத்தை தொடர்புப்படுத்தி, ஜாய் கிரிஸில்டா பேசியதால் அந்த நிறுவனத்துக்கு 15 நாட்களில் ரூ.12.5 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் வேறு ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக கருத்து தெரிவிக்க விரும்பினால் அவரது பெயரை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று, மாதம்பட்டி தங்கவேலு நிறுவனத்தின் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதற்கு, ஜாய் கிரிஸில்டா தரப்பில் எதிர்ப்பு வழக்கறிஞர், வெறும் ரங்கராஜ் என்றால் யாருக்கும் தெரியாது என்றும், அவரை பாதுகாப்பதற்காக மாதம்பட்டி தங்கவேலு நிறுவனம் இந்த வழக்கை தொடர்ந்திருப்பதாகவும், பதிவிட்ட கருத்தை நீக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் 24ந் தேதிக்கு விசாரணைக்கு வர உள்ளது.


Click it and Unblock the Notifications











