ஜாய் கிரிஸில்டா ஒருபக்கம்.. குக் வித் கோமாளி டீம் மறுபக்கம்.. மாதம்பட்டி ரங்கராஜை இப்படி செய்றாங்களே!
சென்னை: ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து இரண்டு மகன்களை பெற்றவர் மாதம்பட்டி ரங்கராஜ். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவரது பெர்சனல் வாழ்க்கையில் இப்போது புயல் அடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்த விவகாரம்தான் அந்த புயலுக்கு காரணம். ஜாயோ காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க; மாதம்பட்டியாரோ அவதூறு வழக்கை தொடர்ந்திருக்கிறார்.
மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான மாதம்பட்டி ரங்கராஜ் அதற்கு பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அப்படத்துக்கு முன்னதாகவே சமையல் கலையில் சிறந்து விளங்கியதால் தமிழ்நாடு முழுவதும் பிரபலமடைந்திருந்தார் அவர். வெள்ளித்திரையில் அவரை காண முடியாவிட்டாலும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருக்கிறார் அவர்.
குடும்ப வாழ்க்கை: இதற்கிடையே ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்தார் மாதம்பட்டி ரங்கராஜ். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ரங்கராஜின் மனைவி அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். மேலும் பெரிய கட்சியில் பொறுப்பும் வகித்துவருகிறார். இரண்டு பேரும் தங்களது திருமண வாழ்க்கையை சுமூகமாக ஓட்டிக்கொண்டிருந்தார்கள். ஆனால் சில மாதங்களாக அந்த சுமூகமான வாழ்க்கையில் ஜாய் கிரிஸில்டா மூலம் கல் வீசப்பட்டிருக்கிறது.

என்ன நடந்தது?: பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குநர் ஃபெட்ரிக் என்பவரை திருமணம் செய்திருந்தவர் ஜாய் கிரிஸில்டா. அதுமட்டுமின்றி சில படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். ஃபெட்ரிக்கை விவாகரத்து செய்த அவருக்கு மாதம்பட்டி ரங்கராஜுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி திருமணத்தில் சென்று முடிந்தது. அதுதொடர்பான புகைப்படங்களையும் ஜாய் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஏமாற்றிவிட்டாரா மாதம்பட்டி?: அந்தப் புகைப்படங்கள் வெளியானாலும்; நிகழ்ச்சி ஒன்றில் தனது முதல் மனைவியுடன் கலந்துகொண்டார் ரங்கராஜ். இதனால் பொங்கி எழுந்த கிரிஸில்டா, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரில், 'என்னை கர்ப்பமாக்கி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார். வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை' என்று குறிப்பிட்டிருந்தார். அவரது புகார் இவ்விவகாரத்தை மேலும் பூதாகரமாக்கியது. பலரும் ரங்கராஜை கிழித்து தொங்கவிட ஆரம்பித்தார்கள்.
வழக்கு தொடர்ந்த ரங்கராஜ்; அடங்காத ஜாய்: நிலைமை அத்துமீறி போவதை உணர்ந்துகொண்ட ரங்கராஜோ ஜாய் கிரிஸில்டா மீது அவதூறு வழக்கை தொடர்ந்தார். இருப்பினும் அடங்காத கிரிஸில்டா, தன்னுடன் ரங்கராஜ் இருக்கும் வீடியோவை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க குக் வித் கோமாளியில் பங்கேற்றிருக்கும் குரேஷியும் மாதம்பட்டியாரை கலாய்த்து சில நாட்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டிருந்தார்.
மீண்டும் மீண்டுமா?: அதனை ரங்கராஜ் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக்கொண்டு நகர்ந்துவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் குக் வித் கோமாளி டீம் அந்த நிகழ்ச்சியில் வைத்தே மாதம்பட்டி ரங்கராஜை கலாய்த்திருக்கிறது. நிகழ்ச்சியின்போது நடிகை ப்ரியா ராமனின் கையை புகழ் பிடித்தார். அப்போது குறுக்கிட்ட ரங்கராஜ், கையை விடுடா என சொல்ல; யோசிக்காமல் கவுண்ட்டர் அடித்த புகழ், 'நான் கையை விடுறது இருக்கட்டும். நீங்க.. என் வாயை கிளப்பாதீங்க' என குறிப்பிட்டார். அதேபோல் குரேஷியிடம் என்ன பாடல் வேண்டும் என ப்ரியா ராமன் கேட்க, ' டூ டூ டூ ஐ லவ் யூ டூ' என்ற பாடலை எனது நண்பருக்காக கேட்கிறேன் என சொல்லி மாதம்பட்டியாரை கலாய்த்துவிட்டார். இவை அனைத்துக்குமே ரங்கராஜ் சிரிப்பையே பதிலாக கொடுத்துக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்களோ என்ன இப்படி கலாய்க்கிறாங்க என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











