2 வாரம் ட்ரெய்னிங் வாங்க.. ஸ்ட்ராங்கா இருக்கேன்.. மாதம்பட்டி ரங்கராஜை அட்டாக் செய்த ஜாய் கிரிஸில்டா
சென்னை: பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவரும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவும் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியானது. மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக் ஜாய் காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருக்கிறார். இந்தச் சூழலில் ரங்கராஜை அட்டாக் செய்து போஸ்ட்டுகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார் அவர்.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. தன்னுடைய தந்தை வழியில் சமையல் தொழிலுக்கு வந்து இப்போது தனக்கென தனி அடையாளத்தையும் புகழையும் சேர்த்திருக்கிறார் அவர். பிரபலங்கள் வீட்டு நிகழ்ச்சிகள் என்றாலே கூப்பிடுங்கள் மாதம்பட்டியாரை என்ற நிலைமைதான் இருக்கிறது. இதனால் குறுகிய காலத்திலேயே தமிழ்நாட்டில் வெகு பிரபலமாகிவிட்டார் அவர்.
நடிகர் ரங்கராஜ்: சமையல் கலைஞராக மட்டும் கலக்கிவந்த அவர்; மெஹந்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தாலும்; அடுத்தடுத்து நடிக்கவில்லை அவர். வெள்ளித்திரையில் அவரை பார்க்க முடியாவிட்டாலும் சின்னத்திரையில் பார்க்க முடிகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருக்கிறார்.

குடும்ப சர்ச்சை: சூழல் இப்படி இருக்க அவர் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்திருக்கிறார். அவர்களுக்கு குழந்தைகளும் இருக்கிறார்கள். திடீரென அவரும் பிரபல ஆடை வடிவமைப்பாளரும் ஜாய் கிரிஸில்டாவும் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகின. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக ஸ்ருதியை விவாகரத்து செய்யாமலேயே எப்படி அவர் இன்னொரு திருமணம் செய்யலாம் என்று பலரும் பேசினார்கள். அதற்கு அவர் அமைதிதான் காத்தார். அதுமட்டுமின்றி புகைப்படங்கள் வெளியான சில நாட்களிலேயே முதல் மனைவியுடன் ஒரு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
வாள் சுழற்றிய ஜாய்: நிலைமை இவ்வாறு செல்ல; மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ஜாய் கிரிஸில்டா. தனக்கு நீதி வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடமும் எக்ஸ் பக்கத்தின் மூலம் கோரிக்கை வைத்தார். மேலும் ரங்கராஜுடன் வெளிநாடு சென்றது, இரண்டு பேரும் முத்தம் கொடுத்துக்கொண்ட புகைப்படங்கள், ரொமான்ட்டிக்காக அவர் பேசிய வீடியோக்களை எல்லாம் வெளியிட்டார். அது பெரிய விவாதத்தை கிளப்பிவிட்டது.
மீண்டும் போஸ்ட்: இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா தனது தோழிகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, 'இரண்டு வாரம் எங்களிடம் ட்ரெய்னிங் வாருங்கள். சந்தோஷமாக வாழ்வதற்கு சொல்லி தருகிறோம். கர்மா அனைத்தையும் பார்த்துக்கொள்ளும். நான் மென்ட்டலியாக ஸ்டாராங்காக இருக்கிறேன்' என கூறி மாதம்பட்டியை அட்டாக் செய்திருக்கிறார். முன்னதாக, குக் வித் கோமாளி குரேஷி மாதம்பட்டி ரங்கராஜை கிண்டல் செய்யும் தொனியில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதற்கு ரங்கராஜோ, 'ரொமான்ஸ் பற்றவில்லை; என்னிடம் இரண்டு வாரம் ட்ரெய்னிங் வா' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











