அப்பா மாதம்பட்டி ரங்கராஜைப் போலவே போஸ் கொடுக்கும் மகன்.. ஜாய் கிரிசல்டா பூரிப்பில் போட்ட ட்விட்டர் போஸ்ட்!
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசல்ட்டா விவகாரம் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வருகிறது. மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளிக்கும் போது ஜாய் கிரிசல்ட்டா தான் 6 மாத கர்ப்பிணி என்று தெரிவித்திருந்தார். இவர்களுக்கு இடையிலான பஞ்சாயத்து ஒரு பக்கம் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், கடந்த 1ஆம் தேதி இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததை ஜாய் கிரிசல்டா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் எங்களுக்கு மகன் பிறந்துள்ளான், மகன் அப்படியே அப்பா ரங்கராஜ் மாதிரியான சாயலில் இருக்கிறான் என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள மற்றொரு புகைப்படத்தில் அப்பா மாதம்பட்டி ரங்கராஜைப் போலவே போஸ் கொடுப்பதாக இருவரது புகைப்படங்களையும் இணைத்து பகிர்ந்துள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று தெரிந்துதான் ஜாய் கிரிசல்ட்டாவும் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, இருவருக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தி பெரிய பிரச்னையை உருவாக்கியது. இருவருக்கும் இடையிலான பிரச்னைக்கு பின்னர்தான் இருவரும் திருமணம் செய்து கொண்டதே, ஜாய் கிரிசல்ட்டா மூலம் வெளியே தெரிந்தது.
ஜூனியர் மாதம்பட்டி ரங்கராஜ்: அதன் பின்னர் வழக்குகள், விசாரணைகள், இணையதளத்தில் வாக்கு வாதங்கள் என்று நீண்டுகொண்டே இருந்தது. இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி ஜாய் கிரிசல்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதை ஜாய் கிரிசல்ட்டா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தனது அப்பாவைப் போலவே உரித்து வைத்ததைப் போல ஜூனியர் மாதம்பட்டி ரங்கராஜ் இருக்கிறான் என்று பதிவிட்டிருந்தார்.

மகனும் அப்பாவும்: இந்நிலையில் இன்று தனது மகனின் மற்றொரு புகைப்படத்தையும் மாதம்பட்டி ரங்கராஜின் புகைப்படத்தையும் இணைத்து அப்பாவைப் போலவே மகனும் போஸ் கொடுக்கிறான் என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பல இணையவாசிகள் மாதம்பட்டி ரங்கராஜை நோக்கி, உங்களுக்கு குழந்தை பிறந்துள்ளது, ஆனால் அந்த குழந்தையைப் போய் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லையா என்று கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











