மாதம்பட்டி ரங்கராஜ் Vs ஜாய் கிரிஸில்டா பஞ்சாயத்து.. கிரிஸில்டாவின் தாய் கதறல்?.. அவர் சொன்னது இதுவா?

சென்னை: பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்து பெரும் பரபரப்பை கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம்தான் கோலிவுட்டின் முக்கியமான தலைப்பு செய்திகளில் ஒன்றாக இருக்கிறது.

குக்கூ படத்தை இயக்கிய ராஜுமுருகனின் சகோதரர் சரவணன். இவர் இயக்குனராக அறிமுகமான முதல் திரைப்படம்தான் மெஹந்தி சர்க்கஸ். இதில்தான் மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படம் வணிக ரீதியாக பெரிய கவனத்தை ஈர்க்காவிட்டாலும் விமர்சன ரீதியாக பெரும்பாலானவரால் கொண்டாடப்பட்டது. அந்த படத்துக்கு முன்னதாகவே ரங்கராஜ் தமிழ்நாட்டில் பிரபலமானவராகவே திகழ்ந்து வந்தார்.

என்ன காரணம்: அதற்கு காரணம் அவர் சமையலில் தனித்துவமாக விளங்கியதுதான். பெரும் பணக்காரர்களின் வீட்டு விசேஷம் முதல் பெரிய பிரபலங்களின் வீட்டு விசேஷங்கள் ரை மாதம்பட்டி ரங்கராஜன் கைப்பக்குவம்தான் மணந்தது. அதன் மூலம் அவருக்கு ஏகப்பட்ட புகழும் செல்வமும் கொட்டி கிடைத்தன. சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானாலும் தொடர்ந்து அவர் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று இருக்கிறார்.

Joy Crizildaa s mother has given an interview about Madhampatty Rangaraj
Photo Credit:

சுத்து போட்ட சர்ச்சைகள்: ரங்கராஜின் வாழ்க்கையும் கரியரும் சுமூகமாக போய்க்கொண்டிருந்தது. அப்படிப்பட்ட நிலைமையில் கிறிஸில்டா என்பவர் ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் நடந்துவிட்டதாக கூறி புகைப்படங்களை வெளியிட்டார். ஆனால் மாதம்பட்டி ரங்கராஜோ அது குறித்து மௌனம் காத்து வந்தார். அதே சமயம் தனது முதல் மனைவியான ஸ்ருதியுடன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதை நிறுத்தவில்லை.

புகார் கொடுத்த ஜாய் கிரிஸில்டா: இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துககு வந்த ஜாய்; மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பம் ஆக்கி ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தார். அவரது இந்த புகார் தமிழ் திரை துறையில் மிகப்பெரும் பஞ்சாயத்தாக மாறி இருக்கிறது. இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று நீதிமன்றத்தில் கிரிஸில்டா மீது வழக்கும் தொடர்ந்திருக்கிறார்.

விடாத கிறிஸில்டா: மாதம்பட்டி ரங்கராஜ் நீதிமன்றம் சென்றதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜாயோ, 'ரங்கராஜ் அவரது மனைவியையும் குழந்தையையும் நீதிமன்றத்திற்கு முன் நிற்க வைத்துவிட்டார். கண்டிப்பாக எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் பொறுப்பு. நான் கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து அதனை தடுத்துவருகிறார்' என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

கிரிஸில்டாவின் தாய் பேட்டி?: இந்நிலையில் ஜாய் கிறிஸில்டாவின் தாய் பேட்டி அளித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருகிறது. அந்தத் தகவலின்படி, தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்ததாக கூறப்படும் கிரிஸில்டாவின் தாயார், "எனது பிள்ளைகளை நான் ஒருபோதும் அடித்து வளர்த்ததே இல்லை. ஆனால் குழந்தையை கலைக்க சொல்லி ரங்கராஜ் கிரிஸில்டாவை கடுமையாக தாக்கியிருக்கிறார். அதனால் எனது மகளுக்கு காது கேட்காமல் போய்விட்டது. எத்தனையோ நாள் அவரிடம் அடி வாங்கியதை என்னிடம் என் மகள் மறைத்துவிட்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X