மாதம்பட்டி ரங்கராஜ் என்னை கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார்...ஜாய் கிரிசில்டா புகார்!
சென்னை: பிரபல நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார் என ஜாய் கிரிசில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ் 'மெஹந்தி சர்க்கஸ்' என்கிற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து, பென்குயில் படத்திலும் நடித்திருந்தார். இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். சில மாதங்களுக்கு முன்பு, தானும் மாதம்பட்டி ரங்கராஜ்ஜும் காதலித்து வருவதாக ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜூடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்து இருந்த ஜாய் கிரிசில்டா, தான் 6 மாதம் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் பகிர்ந்து இருந்தார்.

காவல்நிலையத்தில் புகார்: மாதம்பட்டி ரங்கராஜ்ஜிற்கு ஸ்ருதி என்பவருடன் ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும், நிலையில், வேறு ஒரு பெண்ணுடன் மாதம்பட்டி ரங்கராஜ், காதல் உறவில் இருந்தது, மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. அதன் பின் ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜூடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருந்தார். இதுவும் இணையத்தில் பேசுபொருளான நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார் என ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.
ஏமாற்றிவிட்டார்: அந்த புகார் மனுவில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றிவிட்டார். அண்மையில் மாதம்பட்டி ரங்கராஜ், முதல் மனைவி ஸ்ருதியிடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த போட்டோ இணையத்தில் வெளியான நிலையில், அது பற்றிய கேட்பதற்காக நான், அவர் நடுவராக இருக்கும் தனியார் தொலைக்காட்சிக்கு சென்றிருந்தேன். அப்போது அவர் என்னை தாக்கினார். அதைத்தொடர்ந்து எங்கள் இருவருக்குள்ளும் தொடர்ந்து தகராறுகள் வந்து கொண்டே இருந்தன. கோவிலில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்ட அவர், தன்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறார் என்றும் தனது புகாரில் கூறியுள்ளார். ஏழு மாதம் கர்ப்பமாக இருக்கும் என்னை மாதம்பட்டி ரங்கராஜ், ஏற்க மறுக்கிறார். அவருடன் சேர்ந்து வாழ்வதற்காக தான் மன்றாடி வருகிறேன். அவருடன் என்னை சேர்த்து வைக்கும் படியும் அந்த புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











