»   »  ஸ்டைலாக நின்று திரும்பி பார்க்க வைத்த ஜோதிகாவின் 36 வயதினிலே

ஸ்டைலாக நின்று திரும்பி பார்க்க வைத்த ஜோதிகாவின் 36 வயதினிலே

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருமணத்திற்குப் பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஜோதிகா, மலையாளத்தில் ஹிட்டான "ஹவ் ஓல்ட் ஆர் யூ" கதை பிடித்திருந்ததால் அதில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இந்தப் படத்தை அவரது கணவர் சூர்யாவே தயாரிக்கிறார். இதில் ஜோதிகாவுக்கு ஜோடியாக ரகுமான் நடிக்கிறார். மலையாளத்தில் இந்தப் படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸே தமிழிலும் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

பெண்களை மையப்படுத்தி படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்து தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப்படத்திற்கு 36 வயதினிலே என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

துறு துறு ஜோதிகா

துறு துறு ஜோதிகா

தன்னுடைய துறுதுறு நடிப்பாலும், முட்டை கண்ணாலும் அனைவரையும் கவர்ந்த நாயகி ஜோதிகா. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது சினிமாவில் நடித்து வரும் படம் 36 வயதினிலே.

36 வயதினிலே

36 வயதினிலே

பாரதிராஜா இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான படம் 16 வயதினிலே. அதனுடன் 20 ஆண்டுகள் கூட சேர்த்து 36 வயதினிலே என்று தலைப்பு வைத்துள்ளனர்.

ஸ்டைல் போஸ்டர்

ஸ்டைல் போஸ்டர்

படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் அமோகமாக நடைபெற்று வருகின்றன. ரோஷன் ஆன்டிரூ இயக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரே ஒரு அழகான கதை சொல்கிறது.

திரும்பி பார்த்த ஜோ

திரும்பி பார்த்த ஜோ

10 முதல் 60 வயதுவரை உள்ள பெண்கள் திரும்பி நின்று கொண்டிருக்க, ஜோதிகா மட்டும் முன்பக்கம் திரும்பி நின்று ஸ்டைலாக திரும்பி பார்க்கிறார். இந்தப்படத்தின் போஸ்டரே அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கிறது.

மே மாதம் ரிலீஸ்

மே மாதம் ரிலீஸ்

இந்நிலையில், படத்தின் டீஸர் இன்று மாலை யூடியூபில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படம் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
36 Vayathinile is a Tamil movie with production by 2D Entertainment, direction by Rosshan Andrews. Jyothika and Rahman in lead role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil