»   »  வாங்க, சினிமாவில லாபம் பார்க்கும் வழிகளை நான் இலவசமாவே சொல்லித் தரேன்! - ஜேஎஸ்கே அதிரடி

வாங்க, சினிமாவில லாபம் பார்க்கும் வழிகளை நான் இலவசமாவே சொல்லித் தரேன்! - ஜேஎஸ்கே அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்றைய நிலையில் தமிழ் சினிமாவில் வெறும் பட ரிலீஸில் மட்டும் காசு பார்த்தால் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கூட காசு மிஞ்சாது. கடனாளியாகத் தான் தமிழ் சினிமாவை விட்டு வெளியேற வேண்டும்.

ஆனால் ஜேஎஸ்கே சொல்லும் கணக்கில் படத்தை வியாபாரம் செய்தால் ரிலீஸுக்கு முன்பே நல்ல லாபம் பார்த்து விடலாம்.

JSK gives ideas to producers to make profits

புதுமுகங்கள் நடிக்க யாகன் என்ற படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது. நடிகை நமீதா, தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, ஜே.சதீஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்த விழாவில்தான் ஆடியோ மூலம் எப்படி தயாரிப்பாளர்கள் நேரடியாக லாபம் பார்க்க முடியும் என்ற வழியை விளக்கினார் ஜே.எஸ்.கே.

"தங்க மீன்கள் படத்தின் ஆடியோவை குறைந்த விலைக்கு ஒரு கம்பெனிக்கு விற்றோம். ஆனந்த யாழை ஒரு பாடல் மூலம் மட்டுமே ஒண்ணே கால் கோடி ரூபாய் வருமானம் பார்த்தது அந்த கம்பெனி.

இதே போல் ரம்மியில் இடம்பெற்ற 'கூட மேல கூட வெச்சு...' பாடல் ரிங்டோன் மூலம் மட்டும் 80 லட்சம் லாபம் கிடைத்தது. இதுபோல பல வழிகள் வருமானம் பார்க்க இருக்கின்றன. தயாரிப்பாளர்கள் கேட்டால் எந்த நேரமும் ஆலோசனை சொல்லத் தயாராக இருக்கிறேன்," என்றார்.

சுரேஷ் காமாட்சி, நமீதா ஆகியோரும் விழாவில் பேசினார்கள்.

English summary
Leading producer JSK announced that he is ready to give the ideas to producers how to make profit from a movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil