»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

மும்பை:

இந்தி திரைப்பட நடிகை ஜூஹி சாவ்லாவைப் பார்க்க முடியவில்லையேஎன்ற ஏக்கத்தில் நடிகையின் ரசிகர் தனது வயிற்றைக் கத்தியால் கிழித்துதற்கொலை செய்து கொண்டார்.

திரைப்பட நடிகர், நடிகைகள் மீது ரசிகர்கள் அளவு கடந்த பாசமும்,அன்பும், காதலும் கொண்டிருக்கின்றனர். நடிகர், நடிகைகளும் தங்களைப்போன்ற மனிதர்கள்தான். நம்மைப் போல் அவர்களும் நடிப்பு என்றதொழிலைப் பார்க்கின்றனர் என்று எல்லோரும் நினைத்துவிட்டால் எந்தப்பிரச்சினையும் இல்லை.

மனம் கவர்ந்த நடிகைக்குக் கோயில் கட்டுவது, உடல் நலம் பாதிக்கப்பட்டநடிகர், நடிகைககள் குணமாகும் வேண்டும் என்பதற்காக கோயிலுக்குகாவடி எடுப்பது, விரதம் இருப்பது போன்ற நடவடிக்கைகளில் ரசிகர்கள்ஈடுபடுவது வழக்கம்.

தங்களது மனம் கவர்ந்த நடிகர், நடிகைகளைப் பார்ப்பதற்காககிராமப்பகுதிகளில் இருந்து ஏராளமான ரசிகர்கள் (ஆண், பெண்) நகரப்பகுதிக்கு தினமும் வருகின்றனர்.

அந்த வகையில், ஒரு நடிகையின் மீது ரசிகர் ஒருவர் வைத்த அளவு கடந்தபாசம் அவரது உயிரையே வாங்கியுள்ளது சற்று அதிர்ச்சியானநிகழ்ச்சியாகும்.

ஜூஹி சாவ்வா. இந்தித் திரைப்பட நடிகையான இவர் இந்தி தவிர வேறுசில இந்திய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். மிஸ் இந்தியாவாகத்தேர்வு செய்யப்பட்டவர். மிக அழகானவர்.

இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இந்தியா முழுவதும் உண்டு. அந்தரசிகர் பட்டாளத்தில் ஒருவர்தான் தீரஜ் சர்மா (29). பிகார் மாநிலத்தலைநகர் பாட்னாவைச் சேர்ந்த இவர், ஜூஹி நடித்தி வெளியாகும்அனைத்துப் படங்களையும் முதல்நாளே முதல் காட்சியைப்பார்த்துவிடுவார்.

தனது வீட்டின் அனைத்து இடங்களிலும் ஜூஹியின் படத்தை ஒட்டி தனதுகனவுக்கன்னியை ரசித்தவர். ஜூஹியின் மீது வைத்த அளவுகடந்தஅன்பால், தனக்கு திருமணமே வேண்டாம் என்ற முடிவு செய்தவர்.

தனது வாழ்நாளில் ஒருமுறையாவது ஜூஹியைப் பார்க்கவேண்டும் என்றஆசையில் தான் சேர்த்து வைத்திருந்த சொற்ப பணத்துடன் சிலநாட்களுக்கு முன் மும்பை வந்தார்.

பலரிடம் முகவரி கேட்டு ஜூஹியின் வீட்டுக்கு வந்தார். தான் ஜூஹியின்தீவிர ரசிகன். ஜூஹியைப் பார்க்கவேண்டும் என்று ஜூஹி வீட்டுகாவல்காரரிடம் தீரஜ் சர்மா கூறினார். கெஞ்சினார் பிறகு மிஞ்சினார்.

ஆனால், அவரை வீட்டுக்குள் செல்ல காவல்காரர் அனுமதிக்கவில்லை.கழுத்ததைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக தீரஜ் சர்மாவைஅனுப்பிவிட்டார்.

வெகு தூரத்திலிருந்து கஷ்டப்பட்டு வந்தும் கனவுக் கன்னியைப் பார்க்கமுடியவில்லையே என்று ஏங்கினார் தீரஜ் சர்மா. அடுத்து என்ன செய்வது.ஜூஹியைப் பார்க்காத தான் உயிருடன் இருப்பது சரியல்ல என்று முடிவுசெய்தார்.

தான் கொண்டுவந்திருந்த கத்தியால் வயிற்றைக் கிழித்துக் கொண்டார்.குடல் சரிந்தது. ரத்தம் வழிந்தது. இதைப்பார்த்து அய்யோ என்று பதறியவழிப்போக்கர்களும், ஜூஹி வீட்டு காவல்காரரும், தீரஜ் சர்மாவைமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், ஜூஹியைப் பார்க்க முடியவில்லை என்ற ஏக்கத்திலேயே தீரஜ்சர்மாவின் உயிர் பிரிந்தது. இச் சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Read more about: actress, fan, hindi film, juhi chawla, killed, mumbai
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil