»   »  மகாபிரபு... நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா..? - பிக்பாஸ் ஜூலி என்ட்ரி!

மகாபிரபு... நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா..? - பிக்பாஸ் ஜூலி என்ட்ரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலியான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது முதலில் நல்ல வரவேற்பு இருந்தது. அந்த நிகழ்ச்சியில், சிலருடன் சேர்ந்துகொண்டு ஒரு சிலரை கார்னர் செய்தது, ஓவியாவுடன் நேரடியாக மோதியது, பொய்கள் சொல்லி மாட்டிக்கொண்டது எனப் பல காரணங்களால் அவரின் மீது பல விமர்சனங்கள் வந்தன.

அவரைக் கலாய்த்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் பறந்தன. போட்டியாளர்களான காயத்ரியும், ஜூலியும் பெரும்பாலான மக்களால் வெறுக்கப்பட்டு வந்தனர்.

வெளியேற்றம்

வெளியேற்றம்

ஜூலியானா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 'பிக் பாஸ்' வீட்டிலிருந்து வெளியேற்றம் செய்யப்பட்டார். வெளியே போகும்போது, கமலஹாசன், தனது தங்கையை வெளியே அனுப்புவதாகச் சொல்லிப் பரிவோடு அனுப்பி வைத்தார்.

வதந்திகள் :

வதந்திகள் :

தன்னை மாற்றிக்கொண்டு ஓரளவு நல்ல பெயருடன் அவர் வெளியே வந்தார். அதன்பிறகு, அவர் வெளியே வந்ததும் அவர் கிராமத்திற்குப் போய்விட்டதாகவும், பரணியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டதாகவும் பல வதந்திகள் உலாவின.

மீண்டும் விஜய் டி.வி :

மீண்டும் விஜய் டி.வி :

ஆனால், 'பிக் பாஸ்' வீட்டிலிருந்து வந்திருக்கும் ஜூலி இப்போது விஜய் டி.வி-யின் Kings of Comedy Juniors என்ற குழந்தைகளுக்கான காமெடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

இன்னும் மாறலையா :

இன்னும் மாறலையா :

இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒளிபரப்பப்பட்டது. 'எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும்...' பாடலுக்கு ஆடிக் கொண்டிருக்கிறார். 'வந்துட்டேன்னு சொல்லு, மறுபடியும் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு... ஜூலிடா' எனப் பேசி மிரட்டுகிறார். இந்த நிகழ்ச்சி நாளை ஒளிபரப்பாக இருக்கிறது. விஜய் டி.வி-யோட செட் ப்ராப்பர்ட்டி ஆக்காம விடமாட்டாங்க போலயே..!

English summary
Jallikattu fame juliana back to vijay tv. She was one of the star contestants in Big boss programme.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil