»   »  மீண்டும் பிக் பாஸ் வீட்டில் ஜூலி, குண்டு ஆர்த்தி: கொலவெறியில் ஓவியா ஆர்மி

மீண்டும் பிக் பாஸ் வீட்டில் ஜூலி, குண்டு ஆர்த்தி: கொலவெறியில் ஓவியா ஆர்மி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூலி மற்றும் ஆர்த்தி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வருவது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜூலி, ஆர்த்தி, பரணி, சக்தி, காயத்ரி ஆகியோர் நேற்று சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தாங்கள் கற்றுக் கொண்டதை தெரிவித்தனர்.

ரைசா

ரைசா

மேக்கப் பைத்தியம் ரைசாவை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டார்கள். பிக் பாஸ் டைட்டிலை கணேஷ் வெங்கட்ராம் ஜெயிக்க வாய்ப்பு அதிகம் என்று கமலிடம் தெரிவித்தார் ரைசா.

மாடல்

மாடல்

நான் ஒரு மாடல். மாடலிங் உலகில் எவ்வளவு பெரிய மாடலாக இருந்தாலும் பெயரை சொல்ல மாட்டார்கள். அந்த மாடலை கூப்பிடு என்பார்கள். தற்போது பிக் பாஸ் மூலம் என் பெயர் அனைவருக்கும் தெரிந்ததில் மகிழ்ச்சி என்று ரைசா தெரிவித்தார்.

ஆர்த்தி

ஆர்த்தி

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்ற பிறகு மொட்டையடித்து அந்த முடியை புற்றுநோயாளிகளுக்கு விக் செய்ய அளித்ததாக தெரிவித்தார் ஆர்த்தி. அதை கமல் உள்பட பார்வையாளர்கள் அனைவரும் பாராட்டினார்கள்.

ஜூலி

ரைசா வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் ஜூலியும், ஆர்த்தியும் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் இருப்பது போன்ற ப்ரொமோ வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அனுப்புங்க

அனுப்புங்க

ஓவியாவை எதிர்பார்த்தால் ஜூலி பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார். முதலில் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்புங்கள் என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

English summary
Juliana and Harathi are seen entering Big Boss house again in a new promo video released today. Oviya Army is not happy with the latest development.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil