»   »  பிக் பாஸ் ரவுசு: ராத்திரியில் குண்டு ஆர்த்தியுடன் மல்லுக்கட்டிய ஜல்லிக்கட்டு ஜூலி

பிக் பாஸ் ரவுசு: ராத்திரியில் குண்டு ஆர்த்தியுடன் மல்லுக்கட்டிய ஜல்லிக்கட்டு ஜூலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் படுக்கை தொடர்பாக காமெடி நடிகை குண்டு ஆர்த்திக்கும், ஜூலிக்கும் இடையே சண்டை நடந்துள்ளது.

பிக் பாஸ் டிவி ரியாலிட்டி ஷோவை தமிழில் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 25ம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சியில் நமீதா, ஓவியா உள்பட 15 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Julie fights with actres Arthi

அவர்கள் அனைவரும் 100 நாட்கள் ஒரே வீட்டில் வசிக்க வேண்டும். இந்நிலையில் இரவு நேரத்தில் தூங்கச் சென்றபோது டபுள் சைஸ் படுக்கை தொடர்பாக நடிகை குண்டு ஆர்த்திக்கும், ஜல்லிக்கட்டு போராட்ட புகழ் ஜூலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

என் சைஸுக்கு டபுள் சைஸ் படுக்கை தான் சரியாக இருக்கும், அதனால் எனக்கு அது தான் வேண்டும் என்று ஆர்த்தி தெரிவித்தார். ஆனால் ஜூலியோ தனக்கு டபுள் சைஸ் படுக்கை தான் வேண்டும் என்று அடம்பிடித்தார்.

சண்டை போட்ட அவர்கள் ஒருவழியாக சமாதானம் ஆகி படுத்து தூங்கியுள்ளனர். இதெல்லாம் பிக் பாஸுல சாதாரணமப்பா!

English summary
Jallikattu protest fame Julie has fought with actress Arthi in the Big Boss house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil