»   »  படங்களில் நடிச்சே தீருவேன்: பெற்றோருடன் மல்லுக்கட்டும் ஜூலி?

படங்களில் நடிச்சே தீருவேன்: பெற்றோருடன் மல்லுக்கட்டும் ஜூலி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா படங்களில் நடித்தே தீருவேன் என்று கூறி பெற்றோரிடம் அடம் பிடிக்கிறாராம் ஜூலி.

சின்னம்மா சின்னம்மா ஓபிஎஸ்ஸை எங்கம்மா என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கோஷமிட்டு பிரபலமானவர் ஜூலி. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெயரை கெடுத்துக் கொண்டார்.

தற்போது ஜூலியை போலி என்று ரசிகர்கள் கலாய்க்கிறார்கள்.

 பிரபலம்

பிரபலம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தனக்கு படங்களில் நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக பேட்டி ஒன்றில் ஜூலி தெரிவித்துள்ளார்.

அடம்

அடம்

சினிமா படங்களில் நடிப்பேன் என்று பெற்றோரிடம் அடம்பிடிக்கிறாராம் ஜூலி. இதனால் அவருக்கும், பெற்றோருக்கும் இடையே பிரச்சனையாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய்

விஜய்

நான் தளபதி விஜய் ரசிகை. ஆனால் தல அஜீத்துடன் சேர்ந்து படத்தில் நடிக்க ஆசையாக உள்ளது என்று ஜூலி பேட்டியளித்தார். இதை பார்த்து தல, தளபதி ரசிகர்கள் கடுப்பாகி ஜூலியை கலாய்த்தனர்.

 ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

ஜூலி விஷயத்தில் தல, தளபதி ரசிகர்களிடையே எந்த பிரச்சனையும் இல்லை. இருவரும் சேர்ந்தே அவரை ஃபேஸ்புக், ட்விட்டரில் போதும் போதும் என்கிற அளவுக்கு கலாய்த்துவிட்டனர்.

English summary
Buzz is that former Bigg Boss contestant Juliana wants to act in movies as she is getting offers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil