»   »  ஜூலை 17... தள்ளிப்போட வாய்ப்பே இல்ல... தனுஷ் - சிவகார்த்தி- சிம்பு மோதல்!

ஜூலை 17... தள்ளிப்போட வாய்ப்பே இல்ல... தனுஷ் - சிவகார்த்தி- சிம்பு மோதல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு நடித்த படங்கள் வரும் ஜூலை 17-ம் தேதி வெளியாகவிருப்பதால், கோலிவுட்டில் ஒரு சின்ன பரபரப்பு கிளம்பியுள்ளது.

இந்த மோதலைத் தவிர்க்க முயன்றும் முடியாததால், நடப்பது நடக்கட்டும் என்று ரிலீஸ் செய்கிறார்கள்.


அப்படி வெளியாகும் படங்கள்... தனுஷின் மாரி, சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன், சிம்புவின் மிகத் தாமதமான வாலு!


மாரி

மாரி

இந்தப் படத்தை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். தனுஷ் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


ரிலீஸ் தேதி குழப்பம்

ரிலீஸ் தேதி குழப்பம்

இதனிடையே படத்தை வருகிற ஜூலை 17-ந் தேதி வெளியிடுவதாக அறிவித்தனர். ஆனால் பின்னர் தேதி மாறக்கூடும் என்று கூறப்பட்டதால் குழப்பம் நீடித்தது. ஆனால் இப்போது, எந்தக் குழப்பமும் வேண்டாம்.. படம் முதலில் அறிவிக்கப்பட்ட அதே ஜூலை 17-ல் வெளியாகும் என்று இயக்குநர் பாலாஜி மோகன் அறிவித்துள்ளார்.


ரஜினி முருகன்

ரஜினி முருகன்

சிவகார்த்திகேயன் நடிப்பில், பொன்ராம் இயக்கத்தில், லிங்குசாமி தயாரித்துள்ள ரஜினி முருகன் படம் ஜூலை 17-ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தனுஷ் படம் வெளியாகும் தேதியில் இந்தப் படத்தை விட்டால் பிரஸுக்கு அவல் கொடுத்த மாதிரி இருக்குமே என முதலில் யோசித்தனர். ஆனால் நாம்தானே முதலில் ஜூலை 17 என அறிவித்தோம். எதற்காக தயங்க வேண்டும் என்று தில்லாக வெளியிடுகின்றனர்.


வாலு

வாலு

எத்தனை முறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது என்று கணக்கு வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு விதவிதமாக தேதிகள் அறிவிக்கப்பட்ட படம் சிம்பு நடித்த வாலு. விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதிதான் ஜூலை 17. இந்த முறை நிச்சயம் சொன்ன தேதியில் படம் வெளியாகும் என்கிறார், படத்தை வெளியிடும் சிம்புவின் நைனா!


முப்பெரும் போட்டி

முப்பெரும் போட்டி

இதுவரை இந்த மூன்று நடிகர்களின் படங்களும் ஒரே தேதியில் வெளியானதில்லை. தனுஷ் - சிம்பு என்றிருந்த வரிசை, இப்போது தனுஷ், சிவகார்த்தி, சிம்பு என்றாகியிருக்கிறது. இந்த மூன்று படங்களின் வெற்றி, இந்த வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்துமா? பார்க்கலாம்!


English summary
Dhanush's Maari, Sivakarthikeyan's Rajinimurugan and Simbu's long delayed Vaalu are gearing up to clash on July 3rd.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil