»   »  ஜூலை 31: அரை டஜன் படங்கள் வெளியாகின்றன

ஜூலை 31: அரை டஜன் படங்கள் வெளியாகின்றன

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமா இந்த வருடத்தின் முதல் 6 மாதத்தில் மாபெரும் நஷ்டத்தைச் சந்தித்து தற்போதுதான், அதில் இருந்து மீண்டு வருகிறது. அதற்குள் மறுபடியும் இந்த மாதிரி விஷயங்கள் நடந்து சரிவை நோக்கியே பயணப்பட வைக்கின்றன தமிழ் சினிமாவை.

விஷயம் பெரிதாக இல்லை ஜூலை 31 ம் தேதி மொத்தமாக 6 படங்கள் வெளியாகின்றன, வெளியாகும் படங்களில் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் இல்லை. எல்லாமே இளம் நடிகர்களின் படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களான சிம்பு, சிவகார்த்திகேயன், விமல், விஜய் சேதுபதி, விக்ராந்த் மற்றும் ஜெயம் ரவி ஆகிய 6 பேரின் படங்களும் ஜூலை 31 ம் தேதியில் திரையைத் தொட உள்ளன.


அந்த 6 படங்களையும் பற்றிக் கீழே காணலாம்.


வாலு

வாலு

சிம்பு - ஹன்சிகா நடிப்பில் உருவான வாலு திரைப்படம் ஜூலை 31 ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த முறையாவது வெளியாகுமா? என்று தெரியவில்லை பார்க்கலாம்.


ரஜினிமுருகன்

ரஜினிமுருகன்

படம் தொடங்கும்போதே ரம்ஜான் வெளியீடாக வரும் என்று அறிவித்து இருந்தார்கள், ஆனால் ரம்ஜான் ரேஸில் படம் கலந்து கொள்ளவில்லை. சிவகார்த்திகேயன் ஜோடியாக புதுமுக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார்.காக்கிச்சட்டை படத்திற்குப் பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது.


ஆரஞ்சு மிட்டாய்

ஆரஞ்சு மிட்டாய்

விஜய் சேதுபதி சொந்தமாக கதை எழுதி தயாரித்திருக்கும் படம் ஆரஞ்சு மிட்டாய், படத்தில் சொந்தமாக 2 பாடல்களையும் வேறு எழுதிப் பாடியிருக்கிறார் விஜய் சேதுபதி. படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது, படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் சற்று அதிகமாகவே உள்ளது.


 சகலகலா வல்லவன் என்கிற அப்பாடக்கர்

சகலகலா வல்லவன் என்கிற அப்பாடக்கர்

ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக்குப் பின்னர் ஜெயம் ரவி நடித்து வெளிவரும் திரைப்படம் சகலகலா வல்லவன் என்கிற அப்பாடக்கர், படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் த்ரிஷா என 2 நாயகிகள் நடித்து இருக்கின்றனர். ரோமியோ ஜூலியட் வெற்றியை சகலகலா வல்லவன் என்கிற அப்பாடக்கர் தக்க வைக்குமா? என்று பார்க்கலாம்.


மாப்ள சிங்கம்

மாப்ள சிங்கம்

காவல் படத்தின் மாபெரும் தோல்விக்குப் பின்னர் விமலின் நடிப்பில் வெளிவரும் படம் மாப்ள சிங்கம், விமலுக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருக்கிறார். படம் சிங்கமாக மாறி விமலின் மார்க்கெட்டைத் தக்க வைக்குமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.


தாக்க தாக்க

தாக்க தாக்க

தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடிக்க போராடிக் கொண்டிருக்கும் விக்ராந்த் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார், படத்தில்இடம்பெறும் ஒரு பாடலில் விக்ராந்துடன் இணைந்து ஆர்யா, விஷ்ணு விஷால், விஷால் ஆகிய மூவரும் நடித்திருக்கின்றனர். ஜூலை மாத இறுதியில் வெளியாகும் தாக்க தாக்க விக்ராந்துக்கு ஒரு ஆரம்பத்தைக் கொடுக்குமா?


English summary
July 31st will also see the release of Simbu Starrer Vaalu, Jeyam Ravi starrer ‘Sakalakalavallavan’ , Vijay Sethupathi starrer ‘Orange Mittai’ ,Vemal starrer ‘Maapla Singam’, Sivakarthikeyan Starrer Rajinimurugan And Vikranth Starrer Thakka Thakka. So it is going to be a great competition among these six films in the box office and it is also going to be a big treat for the movie lovers.
Please Wait while comments are loading...