»   »  அடல்ட்ஸ் விளையாடும் 'ஜுமான்ஜி' இரண்டாம் பாகம்! - தமிழிலும் ரிலீஸ்

அடல்ட்ஸ் விளையாடும் 'ஜுமான்ஜி' இரண்டாம் பாகம்! - தமிழிலும் ரிலீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சூப்பர்ஹிட் ஹாலிவுட் படமான 'ஜுமான்ஜி' படத்தின் இரண்டாம் பாகமாக 'ஜுமான்ஜி - வெல்கம் டு தி ஜங்கிள்' உருவாகியிருக்கிறது. சிறுவர்களுக்கு பதிலாக இந்தப் படத்தில் பெரியவர்கள் நடிக்கிறார்கள்.

ஹாலிவுட் படங்களில் சற்று வித்தியாசமானது 'ஜுமான்ஜி'. இது ஒரு அதிரடி ஆக்‌ஷன் கலந்த விளையாட்டுப் படம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த படம் இது.

ஜுமான்ஜி விளையாட்டை ஆட ஆரம்பித்தால் ஜுமான்ஜி உலகிற்குள் புகுந்து நிஜமான அனுபவத்தைப் பெறலாம். இந்த விளையாட்டில் வெற்றிபெற்றால் தான் வெளியே வர முடியும்.

ஜுமான்ஜி

ஜுமான்ஜி

1995-ம் ஆண்டு 'ஜுமான்ஜி' படம் வெளிவந்தது. குழந்தைகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 'ஜுமான்ஜி' படத்தின் வெற்றிக்குப் பிறகுதான் குழந்தைகளுக்கான படங்கள் தொடர்ச்சியாக ஹாலிவுட்டில் வெளிவரத் தொடங்கின.

ஜுமான்ஜி வெல்கம் டு தி ஜங்கிள்

ஜுமான்ஜி வெல்கம் டு தி ஜங்கிள்

தற்போது 'ஜுமான்ஜி வெல்கம் டு தி ஜங்கிள்' என்ற படம் வெளிவருகிறது. அதே விளையாட்டு படம்தான். இம்முறை விளையாடுகிறவர்கள் சிறுவர்கள் அல்ல பெரியவர்கள். விளையாட்டு நடக்கும் இடம் அடர்ந்த காடு.

அடல்ட்ஸ் நடிக்கும் ஜுமான்ஜி

அடல்ட்ஸ் நடிக்கும் ஜுமான்ஜி

இந்தப் படத்தை ஜேக் கஸ்டன் இயக்கி உள்ளார். கொலம்பியா பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. டுவைன் ஜான்சன், ஜாக் பிளாக், கெவின் ஹார்ட், கெரன் ஜிலன், நிக் ஜோன்ஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹென்னி ஜேக்மேன் இசை அமைக்க, குயலி படாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழிலும் ரிலீஸ்

தமிழிலும் ரிலீஸ்

'ஜுமான்ஜி - வெல்கம் டு தி ஜங்கிள்' படம் உலகம் முழுவதும் வருகிற டிசம்பர் 25 அன்று வெளிவருகிறது. 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டி தொழில்நுட்பத்திலும் இந்தப் படம் வெளிவருகிறது. இந்தியாவில் ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளிவர இருக்கிறது.

English summary
'Jumanji - Welcome to the Jungle' is the second part of Superhit Hollywood film 'Jumanji'. The film is being released in Tamil as well as in December.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X