ஜூன் மாதம் மீனா வாழ்க்கையில் சோகமான மாதம்...கலங்கும் ரசிகர்கள்

சென்னை : நடிகை மீனாவின் கணவர் உயிரிந்த தகவலில் ரசிகர்கள் மிகுந்த மனவருத்தம் அடைந்துள்ளனர். மீனாவின் பழைய சோஷியல் மீடியா பதிவும், பழைய போட்டோக்கள், அவரின் வாழ்க்கையில் நடந்த பழைய நிகழ்வுகள் என ஒவ்வொன்றாக குறிப்பிட்டு கலங்கி வருகின்றனர்.

June month is really a big tragedy month in Meenas life for this reason

மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று உயிரிழந்துள்ளார். கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்புகளால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார் வித்யாசாகர். கடந்த சில நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை வித்யாசாகர் உயிரிழந்துள்ளார்.

Recommended Video

Meena Husband இறுதிச்சடங்கு..முன்னின்று நடத்தும் பிரபலங்கள்*Celebrity

ரஜினிகாந்த், சரத்குமார், பிரபுதேவா, ரம்பா, விஷால் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நேரிலும், சோஷியல் மீடியாவிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் நேற்று போனில் மீனாவை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய நிலையில், இன்று நேரில் வந்து வித்யாசாகரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார். தமிழக அரசின் சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் நேரில் வந்து ஆறுதல் கூறி உள்ளார்.

வித்யாசாகருக்கும், மீனாவிற்கும் 2009 ம் ஆண்டு ஜுலை 12 ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்து 14வது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளனர். இவர்களின் திருமண நாளுக்கு இன்னும் 14 நாட்கள் தான் உள்ளது. இந்த சமயத்தில் இப்படி ஒரு தாங்க முடியாத சோகம் நிகழ்ந்துள்ளது அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

மீனாவின் வாழ்க்கையில் இது போன்ற ஒரு திடீர் இழப்பு, தாங்க முடியாத சோகம் ஏற்படுவது இது முறை முறையல்ல. இதற்கு முன் 2014 ம் ஆண்டு மீனாவின் அப்பா துரைராஜிற்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது.

இந்த துயர சம்பவம் நடந்ததும் ஜுன் மாதம் தான். தற்போது அதே போன்றதொரு ஜுன் மாதத்தில் தனது கணவரையும் மீனா இழந்துள்ளார். ஜுன் மாதம் மீனாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத துயர மாதமாக மாறி உள்ளதால் ரசிகர்கள் இதனை குறிப்பிட்டு, வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X