»   »  ஹீரோக்களே உஷார்: கோலிவுட்டுக்கு யார் வருகிறார்னு பாருங்க!

ஹீரோக்களே உஷார்: கோலிவுட்டுக்கு யார் வருகிறார்னு பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: மகாநதி படம் மூலம் கோலிவுட் வருகிறார் ஜூனியர் என்.டி.ஆர்.

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழக்கை வரலாறை நாக் அஷ்வின் மகாநதி என்ற பெயரில் படமாக எடுத்து வருகிறார். படம் தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது.

படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

ஷூட்டிங்

ஷூட்டிங்

மகாநதி படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து கொண்டிருக்கிறது. படத்திற்காக வெயிட் போடும் முயற்சியில் இறங்கியுள்ளார் கீர்த்தி.

ஜூனியர் என்.டி.ஆர்.

ஜூனியர் என்.டி.ஆர்.

சாவித்ரியின் படத்தில் என்.டி.ஆர். மற்றும் நாகேஸ்வர ராவின் கதாபாத்திரங்கள் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் என்.டி.ஆராக அவரின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

என்.டி.ஆர்.

என்.டி.ஆர்.

என்.டி.ஆரை அடுத்து அவரது பேரனும் தமிழ் படத்தில் நடிக்க உள்ளார். முன்னதாக சிவாஜி கணேசனின் கர்ணன் படத்தில் கிருஷ்ணராக நடித்திருந்தார் என்.டி.ஆர். என்பது குறிப்பிடத்தக்கது.

துல்கர்

துல்கர்

ஜெமினி கணேசனாக மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிக்கிறார். அவர் ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். சமந்தா பத்திரிகையாளராக நடிக்கிறார்.

English summary
According to reports, Junior NTR is likely to make his debut in Kollywood through Mahanati.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil