Don't Miss!
- Finance
பட்ஜெட் 2023: இதற்கு தான் முக்கியத்துவம் தரனும் - ப. சிதம்பரம்..!
- News
அதானி விவகாரம்.. எல்ஐசி, எஸ்பிஐ வங்கி சேமிப்புகளுக்கு பாதிப்பா.. வேல்முருகன் வைத்த முக்கிய டிமாண்ட்
- Lifestyle
இறந்த உடலை சாப்பிட்ட அரசர்கள் முதல் அரசவையில் சுயஇன்பம் செய்த அரசர் வரை தலைசுற்ற வைத்த மன்னர்கள்...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சென்னையில் பிறந்த பெருமையுடன் ராமச்சரன்... நானும் வர்றேன் என்று சொன்ன ஜீனியர் என் டி ஆர்
சென்னை: இந்த வருடத்தின் இந்திய பிரமாண்டம் ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கும் வரலாற்று திரை அனுபவம், பாகுபலியின் பிரமாண்டத்திற்கு பிறகு இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்).
இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் பிரமாண்ட படைப்பாக Lyca Productions சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா & DVV Entertainment சார்பில் தானய்யா ஆகியோர் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்கள். இந்திய திரைத்துறையில் மொழி, மாநில எல்லைகள் கடந்து இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கும் படைப்பு RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்) திரைப்படம்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் "RRR" திரைப்படத்தில் பாலிவுட் முன்னணி நாயகி ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, நடிகர் சமுத்திரகனி உட்பட பல முன்னணி நடசத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
ட்விட்டரில்
சாதனை
படைத்த
டாப்
5
திரைப்படங்கள்...
பாலிவுட்
படங்களை
ஓரம்
கட்டிய
ஜெய்பீம்!

முன்னோட்ட விழா
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் முன் வெளியீட்டு பணிகள் துவங்கியுள்ளன. ஜனவரி 7 ஆம் தேதி உலகமெங்கும் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகிறது. நேற்று சென்னையில், இப்படத்தின் தமிழ் பதிப்ற்கான , பிரமாண்ட முன்னோட்ட விழாவில், இயக்குநர் S S ராஜமௌலி, Lyca Productions சார்பில் தமிழ்குமரன், தயாரிப்பாளர் NV பிரசாத், DVV Entertainment சார்பில் தயாரிப்பாளர் தானய்யா, நடிகர் ராம்சரண், நடிகர் ஜீனியர் என் டி ஆர், ஆலியாபட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாலிவுட் படத்தில் மட்டும்
நடிகை ஆலியா பட் பேசியதாவது...நான் என் திரைப்பயணத்தை இங்கு தமிழில் தான் ஆரம்பித்தேன். இப்போது மீண்டும் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. RRR படத்தை காண நானும் மிக ஆவலாக இருக்கிறேன். எனக்கு இப்படத்தில் நடித்தது ஒரு கனவு நனவானது போன்று தான் இருந்தது. உங்களுக்கு இப்படம் மிகப்பெரிய சந்தோஷத்தை தரும். பாலிவுட் படத்தில் மட்டும் நடிப்பதில் எனக்கும் ஆர்வமில்லை. ஒரு இயக்குநர் தான், நான் நடிப்பதை முடிவு செய்ய வேண்டும், இயக்குநரின் பார்வை தான் முக்கியம். நான் நடிக்க ஆர்வமாகவே இருக்கிறேன். இப்படத்தில் என்னை மிக மிக ஆதரவாக பார்த்து கொண்டார்கள், படத்தில் நடித்தது மிக இனிமையான அனுபவமாக இருந்தது. இந்தப்படத்தில் நடிக்கும்போது ரசிகர்களின் அன்பை பார்த்து மிரண்டுவிட்டேன். நான் தொடர்ந்து தென்னிந்திய படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

சென்னையில் தான் பிறந்தேன்
நடிகர் ராம்சரண் பேசியதாவது...இங்கு வந்து தமிழக ரசிகர்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி. ராஜமௌலி உடன் எப்போது வேலை பார்த்தாலும் அது சவாலானதாக தான் இருக்கும். அவர் ஒவ்வொரு கதாப்பத்திரத்தையும் மிக தெளிவாக வரையறை செய்திருப்பார். அது எப்படி திரையில் வரவேண்டும் என்பது அவருக்கு தெரியும். இப்படத்தில் வரலாற்று நாயகர்களை ஹீரோவாக படைத்திருக்கிறார்.அதை திரையிலும் சரியாக கொண்டு வர நாங்கள் உழைத்திருக்கிறோம். படத்தில் வேலை செய்த போது சில காட்சிகளில் நடிக்கும் போது, என் டி ஆர் ஃப்ரீயாக இருப்பார் அதை பார்த்த போது, அவரது கேரக்டரை நான் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருக்கிறேன். நான் சென்னையில் தான் பிறந்தேன். தமிழ் என் இரண்டாவது தாய்மொழி, இப்படத்தில் தமிழில் பேசியது மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. மிக மிக சந்தோஷமாக இருந்தது. தமிழ் ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடுவார்கள்.

இந்திய அளவில் பிரமாண்ட படம்
நடிகர் ஜீனியர் என் டி ஆர் பேசியதாவது...உங்களுடன் கலந்துரையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ராஜமௌலி எங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அதுவே எனக்கு பயத்தை தந்தது. ஒரு நடிகருக்கு இயக்குநர் நம்புவதை தருவது சவாலானது. அதை எங்களால் முடிந்தளவு சிறப்பாக செய்திருக்கிறோம். எனக்கும் ராம்சரணுக்கு தோன்றிய எண்ணம் தோன்றியது. நான் கஷ்டப்பட்டு ஷூட்டிங் செய்யும்போது அவர் பேக்கப் பண்ணி போய்கொண்டிருப்பார், என்னை விட்டுட்ட்டு போறியா இரு நானும் வர்றேன் என்பேன். படம் முழுக்க வேலை பார்த்ததே, மிக புதிதான அனுபவமாக இருந்தது. பாகுபலி இந்தியா முழுதையும் ஒன்றாக்கியது எந்த நடிகரும் எந்த மொழியிலும் நடிக்கலாம். விஜய் சாரின் மாஸ்டர் படம் தெலுங்கில் மிகபெரிதாக வெற்றி பெற்றது. ஒரு நாள் இந்திய அளவில் ஒரு பிரமாண்ட படம் உருவாகும், அதில் நாங்கள் எல்லோரும் நடிக்கலாம். தென்னிந்திய சினிமா பிறந்தது சென்னையில் தான். சிரஞ்சீவி சார் பிறந்ததே இங்கு தான். தமிழுக்கும் சினிமாவுக்குமான தொடர்பு மறுக்கமுடியாதது. இப்படத்தில் கார்கி, விஜய் மிகச்சிறப்பாக எங்களுக்கு தமிழ் சொல்லி தந்தார்கள். தமிழை சரியாக கஷ்டப்பட்டு பேசியிருக்கிறேன். தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள்.
-
டாப் ஹீரோக்களால் ஓடிடியிலும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு பிரச்சினை... யாரை சொல்கிறார் பா ரஞ்சித்?
-
பாதி இங்கே இருக்கு.. மீதி எங்கே.. ஜிமிக்கி பொண்ணு வீடியோ பாடல் ரிலீஸ்.. விஜய் ரசிகர்கள் விரக்தி!
-
என்ன சொல்றீங்க.. சூர்யா 42 படத்தில் சீதா ராமம் ஹீரோயின் நடிக்கிறாங்களா? அதுவும் அந்த ரோலிலா?