twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரே ஒரு டான்ஸ் ஸ்டெப்… 12 மணி நேரம் படமாக்கப்பட்டது… RRR படத்தின் சுவாரசியம் !

    |

    ஆந்திரா : ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஆர்ஆர்ஆர். இப்படம் ஜனவரி 7-ஆம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ஜூனியர் என்டிஆர், இப்படத்தின் படப்பிடிப்பின் போது நிகழ்ந்த சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

    5 மில்லியன் வியூசை கடந்த ஷிவாங்கியின் நோ நோ வீடியோ ஆல்பம் 5 மில்லியன் வியூசை கடந்த ஷிவாங்கியின் நோ நோ வீடியோ ஆல்பம்

    29வது படம்

    29வது படம்

    ஜூனியர் என்டி ஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படம் ஜூனியர் என்டி ஆரின் 29வது திரைப்படமாகும். இதில், அவர் ஹைதராபாத் நிஜாமுக்கு எதிராகப் போராடிய கொமரம் பீம் என்ற ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக நடித்துள்ளார்.

    அர்ப்பணிப்புடன்

    அர்ப்பணிப்புடன்

    இப்படத்தில் நடித்த அனுபவத்தை ஊடகத்திற்கு பகிர்ந்துள்ளார். அதில், ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் படப்பிடிப்பு 2018ம் ஆண்டு தொடங்கியது. இந்த படத்திற்காக நிறைய விஷயங்களை அர்ப்பணிக்க வேண்டி இருந்தது. நாட்கள் செல்ல செல்ல மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் நாங்கள் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டோம் என்றார்.

    உக்ரைனில் டான்ஸ்

    உக்ரைனில் டான்ஸ்

    "RRR" திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டுக்கூத்து பாடல் உக்ரைனில் உள்ள கியேவில் படமாக்கப்பட்டது. அந்த பாடலில் நானும் ராம் சரணும் இணைந்து நடனம் ஆடவேண்டும். இந்த நடனத்திற்கான ஒத்திகையில் ஈடுபட்டு இருந்தோம். டான்ஸ் ஸ்டெப், வந்து இரண்டு கால்களையும் முன்னும் பின்னும் அசைக்க வேண்டும்.

    12 மணிநேரம்

    12 மணிநேரம்

    அந்த ஒரே ஒரு காட்சி மட்டும் 12 மணிநேரம் படமாக்கப்பட்டது. தொடர்ந்து ஒத்திகை செய்தும் இந்த கால் சரியா வைக்கல, அந்த கால சரியா வைக்கவில்லை என்று ராஜமௌலி கூறிக்கொண்டே இருந்தார். 15 மற்றும் 18 டேக்குகளுக்கு பிறகு ஒரு வழியாக டேக் ஓக்கே என்று கூறியதாக ஜூனியர் என்டிஆர் கூறினார்.

    மக்கள் ரசித்தார்கள்

    மக்கள் ரசித்தார்கள்

    இயக்குனர் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறார், ஒரு நடன காட்சிக்கு 12 மணிநேரமா என்று மனதிற்குள் கேள்வி எழுந்தது. ஆனால், பாடலை நான் ஆன்லைனில் பார்த்த போது வியந்து போனேன், எந்த நடன அசைவுக்காக நாங்கள் சிரமப்பட்டோமோ அந்த நடனத்தை மக்கள் மிகவும் ரசித்தார்கள். இந்த பாடல் இதுவரை யூடியூப்பில் 26 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கொண்டுள்ளது. ராஜமௌலி இந்தியாவின் மிகப்பெரிய இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் என்றால் அதற்கு அவரின் அர்ப்பணிப்புதான் காரணம் என்று தற்போது தனக்கு புரிந்துள்ளதாக கூறினார்.

    English summary
    Junior NTR shared his experiences of RRR movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X