twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Jurassic World Domininion Review: டைனோசருக்கான மரியாதை போச்சேடா.. அப்போ கும்கி.. இப்போ காப்பானா?

    |

    சென்னை: பாலிவுட் மட்டுமில்ல ஹாலிவுட் திரையுலகமும் நம்ம ஊர் படங்களை பக்காவாக பார்த்து காப்பி அடிக்க ஆரம்பிசிடுச்சு போல என புதிதாக வெளியாகி உள்ள ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் படத்தை பார்க்கும் பலருக்கும் இந்த எண்ணம் எழத்தான் செய்கிறது.

    1990ம் ஆண்டு மைக்கேல் கிரைட்டன் என்பவர் எழுதிய நாவலைத் தழுவி 1993ம் ஆண்டு ஜுராசிக் பார்க் படத்தை உருவாக்கி உலக மக்களுக்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்னதாக அழிந்து போன டைனோசர் எனும் உயிரினத்தை திரையில் உயிர்பெறச் செய்திருந்தார் இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்

    அவர் இயக்கிய அதே கதை மற்றும் காட்சிகளை அப்படியே அப்பட்டமாக காப்பி அடித்து கொஞ்சம் காப்பான் படத்தையும் மிக்ஸ் செய்தது போல ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் படத்தை இயக்கி இருக்கிறார் கோலின் ட்ரிவாரோ.

    ஜுராசிக் உலகின் இறுதி அத்தியாயம்.. ரசிகர்களை கவர்ந்ததா ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்? ஜுராசிக் உலகின் இறுதி அத்தியாயம்.. ரசிகர்களை கவர்ந்ததா ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்?

    என்ன கதை

    என்ன கதை

    டைனோசரை கடித்த கொசு ஒரு ரப்பர் மரத்தின் பசையில் ஒட்டிக் கொண்டு இருப்பதை கண்டுபிடித்து அந்த டிஎன்ஏவை வைத்து புதிதாக ஜுராசிக் பார்க் எனும் தீம் பார்க்கை உருவாக்கி டைனசர்களை காட்சிப்படுத்தி இருப்பார்கள் இதற்கு முந்தைய பாகங்களில் ஆனால், தற்போது மற்ற மிருகங்களை போலவே டைனசர்களும் உலகத்தில் உலாவுவதும் அதனை வேட்டையாடுவதுமாக இந்த படத்தின் கதையை உருவாக்கி உள்ள இடத்திலேயே ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம் அளிக்கிறது.

    5வது பாகத்தின் தொடர்ச்சி

    5வது பாகத்தின் தொடர்ச்சி

    கடந்த 2018ம் ஆண்டு வெளியான 5வது பாகமான ஜுராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம் படத்தின் தொடர்ச்சி தான் இந்த 6வது பாகம் டொமினியன். மக்களோடு மக்களாக கலந்திருக்கும் டைனசர்களை பணத்தாசை காரணமாக வேட்டையாடும் ஒரு கும்பல் மற்றும் அதிக சக்தி வாய்ந்த டிஎன்ஏவை கொண்டுள்ள ஒரு பெண்ணை கடத்தி அவரை ஆராய்ச்சி பண்ணவும் துடிக்கின்றனர். இந்த பிரச்சனையை ஹீரோ கிறிஸ் பிராட் எப்படி சமாளித்தார் என்பது தான் படத்தின் கதை.

    அப்போ கும்கி இப்போ காப்பான்

    அப்போ கும்கி இப்போ காப்பான்

    கடந்த பாகத்தில் ஹீரோ கிறிஸ் பிராட் குட்டி டைனசர்களை கும்கி யானையை போல தனது கன்ட்ரோலில் வைத்துக் கொண்டு கிளைமேக்ஸ் காட்சியில் பெரிய டைனோசர்களையும் அடக்குவார். அப்போதே, இது என்னடா கும்கி படத்தின் காப்பியா? என ரசிகர்கள் கலாய்த்தனர். இந்நிலையில், மேலும், ஒருப்படி முன்னேறி காப்பான் படத்தில் வருவது போன்ற வெட்டிக்கிளிகளின் அட்டகாசம் மற்றும் இயற்கை விவசாயத்தை அவை அழித்து விடும் அதற்கு எதிராக டைனோசர்களை பயன்படுத்துவது என தலையையே சுற்ற வைத்து விட்டார் இயக்குநர்.

    பிளஸ்

    பிளஸ்

    சாம் நெய்ல், லாரா டெர்ன், ஜெஃப் கோல்ட்பிளம் என பழைய ஜுராசிக் வேர்ல்ட் நடிகர்களை கொண்டு வந்தது படத்துக்கு மிகப்பெரிய பிளஸ் தான் என்று சொல்ல வேண்டும். மேலும், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அந்த சேஸிங் சீன் எக்ஸ்ட்ராடினரியாக உள்ளது. அந்த ஒரு காட்சிக்காகவே படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்கலாம்.

    மைனஸ்

    மைனஸ்

    ஆனால், அந்த காட்சியே படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாகவும் மாறி விடுகிறது. அந்த காட்சியை தவிர படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மிகப்பெரிய கூஸ் பம்ப்ஸ் காட்சி மற்றும் புதிய கதை என எதுவுமே இல்லாமல் பழைய படத்தை லேசாக பட்டி டிங்கெரிங் செய்தது போல இந்த படம் உருவாக்கப்பட்டு இருப்பது தான் மிகப்பெரிய மைனஸ் ஆக மாறியுள்ளது. டைனசர்களை கொஞ்சமாவது மிரட்டலாக காட்டாமல், அதுவும் இந்த உலகத்தில் வாழ வேண்டிய உயிரினம் என்கிற எண்ணத்திற்கு பாராட்டலாமே தவிர, ஒட்டுமொத்த படமாக எந்தவொரு பிரம்மிப்பையும் ஏற்படுத்தவில்லை.

    English summary
    Jurassic World Domininion movie review in Tamil (ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் விமர்சனம்): Old wine in a new bottle won’t work for new age audience.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X