Don't Miss!
- News
கையில் துப்பாக்கி, டைம்பாம்.. முகமூடி அணிந்து திருப்பூர் வங்கியில் கொள்ளை முயற்சி.. மாணவர் துணிகரம்
- Sports
BBL டி20 லீக் - 19 வயது வீரர் செய்த சம்பவம்.. 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெர்த் அணி
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஜுராசிக் உலகின் இறுதி அத்தியாயம்.. ரசிகர்களை கவர்ந்ததா ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்?
சென்னை : கடந்த 2018ல் வெளியான ஜுராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம் படத்தின் தொடர்ச்சியாக ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் படம் தற்போது வெளியாகியுள்ளது.
Recommended Video
முந்தைய படங்கள் அனைத்தும் சிறப்பான மற்றும் மிரட்டலான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்த நிலையில், இந்தப் படம் அதை கொடுக்கத் தவறியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த உலகத்தில் மனிதர்கள் ஒரு பகுதிதான் என்பதை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
சுபமுகூர்த்த
நேரத்தில்
நயன்தாரா
கழுத்தில்
தாலி
ஏறவில்லை..
பகீர்
கிளப்பும்
விக்னேஷ்
சிவன்
பெரியப்பா!

டைனோசர் படங்கள்
டைனோசர் படங்களின் மிரட்டலான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் எப்போதும் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்து வந்தன. இந்த உலகில் வாழ்ந்து மறைந்த ஒரு உயிரினத்தை கண்முன் காணும் த்ரில் அனுபவத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விருப்பத்துடன் பார்த்தனர்.

டைனோசர் உலகின் இறுதி அத்தியாயம்
டைனோசர் உலகின் இறுதி பாகமாக தற்போது ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் வெளியாகியுள்ளது. இந்தப் படம் கடந்த 2018ல் வெளியான ஜுராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம் என்ற படத்தின் தொடர்ச்சியாகவே தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படம் ஜுராசிக் உலகின் இறுதி அத்தியாயம் என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

பயோசின் சரணாலயம்
ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக படம் பூர்த்தி செய்ததா என்பது கேள்விக்குறிதான். முதல் பாதியில் மெதுவாக நகரும் படம் இடைவேளையின்போதே சூடு பிடிக்கிறது. மனிதர்களும் டைனோசர்களும் இணைந்து வாழும் யுகத்தில் காணப்படும் பயோசின் சரணாலயத்தில் நடைபெறும் மாற்றங்களை இந்தப் படம் கதைக்களமாக கொண்டுள்ளது.

பயோசின் சரணாலயத்தில் நாசவேலை
இந்த சரணாலயத்தின் சமநிலையை குலைக்கும் வகையிலும் உணவு பஞ்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் கட்டவிழ்த்து விடப்படும் வெட்டுக்கிளிகளின் மரபணு மாதிரியை கைப்பற்ற டாக்டர் எல்லி சாட்லர் மற்றும் டாக்டர் ஆலன் ஆகியோர் அந்த சரணாலயத்தில் நுழைகின்றனர். இதேபோல தங்களது கடத்தப்பட்ட மகளை மீட்க ஓவன் மற்றும் கிளாரியும் அங்கு வருகின்றனர்.

மிரட்டலான காட்சிகள்
இவர்களின் நோக்கம் நிறைவேறியதா என்பதை மையமாக வைத்து தற்போது ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் வெளியாகியுள்ளது. படத்தில் ஓவனாக நடித்துள்ள கிறிஸ் பிராட் தன்னுடைய நடிப்பால் மிரட்டியுள்ளார். டைனோசர்களிடம் இருந்து தப்பிக்கும் காட்சிகள் உள்ளிட்டவை அவரது நடிப்பிற்கு சான்று.

குறைவான டைனோசர் காட்சிகள்
படத்தின் பல காட்சிகளை சிறப்பாக அமைத்துள்ளார் இயக்குநர் கொலின் ட்ரேவோரா. ஆயினும் இறுதி அத்தியாயம் என்று கூறப்பட்டுள்ள இந்தப் படம் ரசிகர்களுக்கு போதிய உற்சாகத்தையும் சிறப்பான அனுபவத்தையும் கொடுக்கத் தவறியுள்ளது. படத்தில் டைனோசர்கள் இடம்பெற்றுள்ள காட்சிகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

அனைத்து உயிரினங்களுக்காக உலகம்
இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல. அனைத்து உயிரினங்களுக்குமானதும்தான் என்ற படத்தின் வசனம் அனைவரையும் ஈர்த்துள்ளது. அதையே படத்தின் கதைக்கருவாக வைத்துள்ளார் இயக்குநர். படத்தில் தமிழ் டப்பிங்கும் சிறப்பாகவே அமைந்துள்ளது. இந்தப் படம் ஆனால் அனைத்துவிதமான ரசிகர்களையும் ஈர்க்கத் தவறியுள்ளதே உண்மை.