இர்ஃபான் கானை ரொம்ப மிஸ் பண்றேன்.. அப்படியொரு நடிப்பை பார்க்கல.. ஜுராசிக் வேர்ல்ட் ஹீரோ நெகிழ்ச்சி!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஜுராசிக் வேர்ல்ட் படத்தின் ஹீரோ கிறிஸ் பிராட் மறைந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானை புகழ்ந்து பேசியிருப்பது இந்திய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பாலிவுட் நடிகரான இர்ஃபான் கான் ஹாலிவுட் படங்களான ஸ்லம்டாக் மில்லியனர், லைஃப் ஆஃப் பை மற்றும் ஜுராஸிக் வேர்ல்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தி உள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புற்றுநோய் பாதிப்பு காரணமாக இர்ஃபான் கான் உயிரிழந்தது ஒட்டுமொத்த உலக சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

ஜுராசிக் வேர்ல்ட்

ஜுராசிக் வேர்ல்ட்

உலக சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்த மீண்டும் ஒரு டைனோசர் படம் ரிலீசாக போகிறது. ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் திரைப்படம் வரும் ஜூன் 10ம் தேதி இந்தியா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளிலும் வெளியாகிறது. இந்த படத்திலும் பிரபல ஹாலிவுட் ஹீரோ கிறிஸ் பிராட் தான் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி இந்திய ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

இர்ஃபான் கான் அற்புதமான நடிகர்

இர்ஃபான் கான் அற்புதமான நடிகர்

புயலும் அமைதியும் ஒரே இடத்தில் இருக்குமா? என்கிற கேள்விக்கு வாழ்நாள் விளக்கமாக இருந்தவர் தான் நடிகர் இர்ஃபான் கான். அப்படியொரு நடிகரை என் வாழ்நாளில் நான் பார்த்ததே கிடையாது. சின்ன கண் சிமிட்டல்களில், சின்ன நகர்வில் கூட ஒருவரால் நடிப்பை காட்ட முடியும் என்பதை நிரூபித்தவர் இர்ஃபான் கான் என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் கிறிஸ் பிராட்.

இருவரும் இணைந்து

இருவரும் இணைந்து

கடந்த 2015ம் ஆண்டு இருவரும் ஒன்றாக இணைந்து ஜுராசிக் வேர்ல்ட் படத்தில் நடித்திருந்தனர். கும்கி யானைகளை கட்டுப்படுத்துவது போல டைனோசர்களை கட்டுப்படுத்தும் கதாபாத்திரத்தில் கிறிஸ் பிராட் நடித்திருப்பார். ஜுராசிக் வேர்ல்ட் தீம் பார்க்கின் நிறுவனர் சைமன் மஸ்ரானி எனும் கதாபாத்திரத்தில் வில்லன் ரோலில் நடித்திருப்பார் இர்ஃபான் கான்.

கிறிஸ் பிராட் இரங்கல்

கிறிஸ் பிராட் இரங்கல்

கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் இர்ஃபான் கான் உயிரிழந்த நிலையில், சர்வதேச பிரபலங்கள் பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். ஹாலிவுட் நடிகர் கிறிஸ் பிராட்டும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஜாம்பவான் நடிகர் இர்ஃபான் கான் மறைவுக்கு கலைத்துறைக்கே பெரிய இழப்பு என உருக்கமாக பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், விரைவில் ஜுராசிக் வேர்ல்ட் 3வது பாகமான டொமினியன் வெளியாக உள்ள நிலையில், மீண்டும் அவர் பற்றி சமீபத்தி அளித்த பேட்டியில் பேசி உள்ளார்.

ஹாலிவுட் படங்களில்

ஹாலிவுட் படங்களில்

1988ம் ஆண்டு சலாம் பாம்பே மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமான இர்ஃபான் கான் சச் எ லாங் ஜர்னி, பார்டிஷன், எ மைட்டி ஹார்ட், டார்ஜிலிங் லிமிடட், ஸ்லம்டாக் மில்லியனர், நியூயார்க் ஐ லவ் யூ, தி அமேஸிங் ஸ்பைடர்மேன், லைஃப் ஆஃப் பை, ஜுராஸிக் வேர்ல்ட், இன்ஃபெர்னோ, பஸல் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்து அசத்தி உள்ளார். இர்ஃபான் கான் மறைந்தாலும் அவரது நடிப்பு என்றுமே திரைவானில் ஒளிர்ந்து கொண்டே இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X