For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இன்னும் ஒரேயொரு பாட்டு தான்: தீபாவளி ரேஸில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்… சூப்பர் அப்டேட்ல இது!

  |

  சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக அசத்தி வரும் சிவகார்த்திகேயனின் 'டான்' திரைப்படம் 100 கோடி வசூலித்தது.

  இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது 'பிரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார்.

  அனுதீப் இயக்கத்தில் தமன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது.

  சிவகார்த்திகேயன் நாயகியுடன் இணைந்து நடிக்கும் தொகுப்பாளர் ரக்ஷன்.. கூட யார் நடிச்சிருக்காங்க தெரியுமா! சிவகார்த்திகேயன் நாயகியுடன் இணைந்து நடிக்கும் தொகுப்பாளர் ரக்ஷன்.. கூட யார் நடிச்சிருக்காங்க தெரியுமா!

  சின்னதிரை டூ சில்வர் ஸ்க்ரீன்

  சின்னதிரை டூ சில்வர் ஸ்க்ரீன்

  விஜய் டீவியின் ரியாலிட்டி ஷோக்களில் சாதாரண போட்டியாளராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், அப்படியே மெல்ல மெல்ல அதே சேனலில் முன்னணி தொகுப்பாளராகவும் ஜொலித்தார். அப்போதே சிவகாத்திகேயனின் காமெடிக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. பின்னர் 'மெரினா' படம் மூலம், சில்வர் ஸ்க்ரீனிலும் தனது பயணத்தை தொடங்கினார்.

  வருத்தப்படாத வாலிபர் சங்கம்

  வருத்தப்படாத வாலிபர் சங்கம்

  முதலில் சின்ன பட்ஜெட் படங்களில் தலை காட்டிய சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள் கிடைத்தன. குறிப்பாக பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', அவரது சினிமா பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படியே தொடர்ந்து அடுத்தடுத்து சில தரமான ஹிட் படங்களை கொடுத்து சினிமாவிலும் முன்னணி ஹீரோ என்ற இடத்தைப் பிடித்தார்.

  டாக்டர்

  டாக்டர்

  கொரோனா ஊரங்கிற்குப் பின்னர் திரையரங்குகளின் நிலமை ரொம்பவே மோசமானது. ரசிகர்கள் தியேட்டர்களுக்கு செல்வதே இனி சந்தேகம் தான் என்ற பேச்சுகள் எழுந்தன. அப்போது சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படம் வெளியாகி, 100 கோடி வசூலை வாரிகுவித்தது. அதுமட்டும் இல்லாமல் அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான 'டான்' படமும், நூறு கோடி வசூல் செய்து சூப்பர் ஹிட் அடித்தது.

  பிரின்ஸ்

  பிரின்ஸ்

  புதிய இளம் இயக்குநர்களுடன் கூட்டணி வைக்கும் சிவகார்த்திகேயன், இந்த முறை தெலுங்கு இயக்குநர் அனுதீப்புடன் ஜோடி சேர்ந்தார். தெலுங்கில் 'ஜதிரத்னலு' படம் மூலம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த அனுதீப், சிவகார்த்திகேயனுடன் இணைந்தது, படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும், இசையமைப்பாளர் தமனும் முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்தார். நாயகியாக மரியா என்ற வெளிநாட்டு நடிகை கமிட் ஆக, 'பிரின்ஸ்' படத்தின் அப்டேட்கள் அமர்க்களம் செய்தன.

  ரொமாண்டிக் காமெடி

  ரொமாண்டிக் காமெடி

  தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் 'பிரின்ஸ்' படத்தில், சிவகார்த்திகேயன் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கும் கல்லூரி மாணவியான மரியாவுக்கும் இடையில் நடக்கும் காதலை, ரொமாண்டிக் காமெடி ஜானரில் அனுதீப் இயக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், 'டாக்டர்', 'டான்' படங்களைப் போன்று, 'பிரின்ஸ்' திரைப்படமும் ஜாலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Recommended Video

  Don comedy | விழுந்து விழுந்து சிரித்த Don படக்குழு... *Kollywood | Filmibeat Tamil
  சூட்டிங் ஓவர்

  சூட்டிங் ஓவர்

  'பிரின்ஸ்' படத்தின் சூட்டிங், தமிழ்நாடு, பாண்டிச்சேரி பகுதிகளில் நடைபெற்றன. இந்நிலையில், இப்படத்தின் சூட்டிங் முடியவுள்ளதாகக் கூறப்படுகிறது. இறுதியாக ஒரேயொரு பாடலின் சூட்டிங் மட்டும் சென்னையில் நடந்து வருவதாகவும், ஓரிரு தினங்களில் அதுவும் முடிந்து விடும் எனவும் அப்டேட் வெளியாகியுள்ளது. அதோடு, சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' கார்த்தியின் 'சர்தார்' படத்துடன் தீபாவளி ரேசில் மோதவிருக்கிறது. இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் செம்ம ஹேப்பி மோடில் உள்ளனர்.

  English summary
  Sivakarthikeyan's 'Prince' major portions shooting wrapped up
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X